கடந்த ஏப்ரல் மாதம் 23ம் நடந்த சட்டசபை தேர்தலில் தவெக கட்சி தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வென்றது. இதில் விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தந்த நிலையில் விஜய் முதல்வரானார்.
ஆட்சி அதிகாரத்தில் எங்களுக்கு பங்கு வேண்டாம், வெளியில் இருந்து இந்த ஆட்சி நடக்க மட்டும் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது விளக்கமாக தெரிவித்தன. மேலும் காங்கிரஸ் விசிக முஸ்லீம் லீக் கட்சி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி தவெக தரப்பில் தரப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதை விரும்பவில்லை.
இந்த நிலையில் தவெக ஆட்சி குறித்தும் முதல்வர் விஜய் செயல்பாடு குறித்தும் தவெக அமைச்சர்களின் நிலைப்பாடு குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து தங்களது எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சட்டசபையிலும் வெளியிலும் தவெக ஆட்சிக்கு எதிரான கருத்துகளை அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 6ம் தேதி மதுராந்தம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக எம்எல்ஏ மறைந்தால் மட்டுமே இப்படி அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால் இந்த தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் சத்யபாமா என்ற 2 பேரும் தவெக கட்சிக்கு தாவி விட்டனர். ஆளுங்கட்சி எம்எல்ஏக்களாக இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம் என கட்சி தலைமைக்கும் ஓட்டுப் போட்ட மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு அவர்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தவெக வுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளன.
இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது. தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை 15ம் தேதி இந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் சென்னையில் அறிவிக்கப்பட உள்ளனர். இனி விஜய் பின்னால் போகக் கூடாது என்று முக்கிய முடிவை கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்துள்ளது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.





