- Advertisement -
Homeபொழுதுபோக்குலால்குடி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், நோட்டாவை முந்த முடியலயே - இதுக்கு பருத்தி...

லால்குடி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், நோட்டாவை முந்த முடியலயே – இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமோ…

- Advertisement -

குறி வைத்தால் தவற மாட்டேன்; தவறும் என்றால் குறியே வைக்க மாட்டேன் என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு பழைய படத்தில் வசனம் ஒன்றை பேசியிருப்பார். அதுவே அவரது அரசியல் குறிக்கோளாகவும் மாறியது. தொடர்ந்து அரசியல் களத்தில் தமிழக முதல்வராக ஜெயித்து காட்டினார். கடந்த 1977ம் ஆண்டு முதல் 87ம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தார்.

அதே போல் தமிழக அரசியல் களத்து வந்த நடிகர் விஜயும் தனது கட்சி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, குறி வைத்தால் தவற மாட்டேன்; தவறும் என்றால் குறி வைக்க மாட்டேன் என்றும் பேசியிருந்தார். எம்ஜிஆர் டயலாக் பேசிய தவெக தலைர் விஜய் அதே போல் தனது அரசியல் லட்சியத்தில் ஜெயித்து காட்டியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் சில நடிகர்கள் அரசியல் ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். மக்கள் மத்தியில் தங்களுக்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் உலக நாயகன் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட நடிகர் கமல்ஹாசனுக்கும் அது வாய்க்கவில்லை. நடிகர் திலகம் என கொண்டாடப்பட்ட சிவாஜி கணேசனுக்கும் அது வாய்க்கவில்லை.

இந்நிலையில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வில்லன் காமெடி குணச்சித்திரம் என நடிப்பில் பன்முகத்தன்மை காட்டி நடித்து வருபவர் மன்சூர் அலிகான். சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அரசியல் ஆர்வம் கொண்ட அவர் இந்திய ஜனநாயக புலிகள் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

- Advertisement -

ஆனால் நடிகர் மன்சூர் அலிகானை திமுக மற்றும் அதிமுக என 2 கட்சிகளுமே கண்டுகொள்ளாத நிலையில், இந்த சட்டசபை தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற தனது சொந்த கட்சி சார்பில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லீமாரோஸ் மார்டின் 60,795 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் மொத்தம் 101 வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த தொகுதியில் நோட்டா பெற்ற வாக்குகள் 390 என்கிற நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் நோட்டாவையே முந்த முடியவில்லை. இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். எதற்கு இந்த வேண்டாத வேலை என்று நடிகர் மன்சூர் அலிகானை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்