- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு கார் கதவை திறந்துவிட்டவரெல்லாம் சூப்பர் ஸ்டாரா? விஜய்யை குறித்து கண்டபடி பேசிய பிரபல நடிகர்

ரஜினிக்கு கார் கதவை திறந்துவிட்டவரெல்லாம் சூப்பர் ஸ்டாரா? விஜய்யை குறித்து கண்டபடி பேசிய பிரபல நடிகர்

- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சூப்பர் ஸ்டார் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எங்கு திரும்பினாலும் இதனை குறித்த பேச்சுக்கள்தான் வலம் வருகின்றன. சினிமா பிரபலங்களில் இருந்து சினிமா பத்திரிக்கையாளர்கள் வரை பலரும் இது குறித்து கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் விஜய்யின் மீது மிக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். அவர் கூறியது பின் வருமாறு…

- Advertisement -

“அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி, சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்துதான். வானத்தில் ஒரு சூரியன்தான், ஒரு நிலவுதான், அதே போல் சூப்பர் ஸ்டார் என்றால் அவர் ஒருவர்தான். அப்துல் கலாமினால் ஜனாதிபதி பதவிக்கு பெருமையா அல்லது ஜனாதிபதி பதவியால் அப்துல் கலாமிற்குப் பெருமையா என்றால் அப்துல் கலாமினால்தான் ஜனாதிபதி பதவிக்குப் பெருமை. அதே போல் ரஜினிகாந்தால்தான் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்குப் பெருமை” என்று மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

“இளைய தளபதி என்ற பட்டத்தை கொண்டிருந்த விஜய், தளபதி என்று ஏன் தனது பட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே அரசியலில் ஒரு தளபதி இருக்கிறாரே. அதே போல் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார். இவ்வாறு அடுத்தவர்களின் பட்டத்திற்கு ஏன் விஜய் ஆசைப்பட வேண்டும். விஜய் அவர்கள் நடிப்பில் இருந்து பேச்சு வரை ரஜினிகாந்தைத்தான் பின்பற்றி வந்தார். அண்ணாமலை தம்பி என்றுன் பாடல் வைத்தவர்தான் விஜய்” என்று கூறிய அவர்,

- Advertisement -

“விஜய் தனது அப்பாவிடம் தான் சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று சொன்னபோது ரஜினிகாந்தின் அண்ணாமலை பட வசனத்தைத்தான் பேசி நடித்துக்காட்டினார். விஜய்யின் ஐந்தாவது படமான விஷ்ணு பட பூஜையின்போது ரஜினிகாந்த் காரில் வந்தார். அப்போது ஓடிச்சென்று ரஜினியின் கார் கதவை திறந்துவிட்டவர்தான் விஜய். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் ரஜினியோடு போட்டி போடவேண்டும்?” என்று கேள்வியெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்