- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் படம் குறித்து கேட்டவுடன் நடிகர் மோகன்லால் சொன்ன பதில் - எவ்வளவு பெரிய சூப்பர்...

அஜீத்குமார் படம் குறித்து கேட்டவுடன் நடிகர் மோகன்லால் சொன்ன பதில் – எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார், என்ன இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் மற்றும் அஜீத்குமார் ஆகிய 4 பேர் மட்டுமே நட்சத்திர நடிகர்களாக லாபம் தரும் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். இவர்களது படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அடுத்து அஜீத்குமார் நடிப்பில் வெளிவர உள்ள குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். இப்போது அவரது நடிப்பில் எல்2 எம்புரான் படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்திருக்கிறது. மலையாள சினிமாவில் 48 மணி நேரத்தில் ரூ. 100 கோடி வசூலை கடந்த படம் இதுதான் என்ற சாதனைை எல்2 எம்புரான் படம் நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

தமிழில் நடிகர் மோகன்லால் பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் கமலுடன் உன்னைப் போல் ஒருவன் படத்திலும் விஜயுடன் ஜில்லா படத்திலும் மோகன்லால் நடித்திருக்கிறார். அதே போல் ஜெயிலர் 2 படமும் உருவாகி வரும் நிலையில் இந்த படத்திலும் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.

வழக்கமாக ஸ்டார் நடிகர்கள் நேர்காணல்களில் பங்கேற்கும்போதும் பொது நிகழ்ச்சிகள் விருது விழாக்களில் பங்கேற்கும் போதும் மற்ற நட்சத்திர நடிகர்கள் குறித்து அவர்களிடம் கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக நடிகர்களிடம் நடிகைகளை பற்றியும், நடிகைகளிடம் நடிகர்கள் குறித்தும் கேட்பது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் எல்2 எம்புரான் படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் நடிகர் மோகன்லால் பங்கேற்றார். அப்போது நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் மோகன்லால், அஜீத்குமார் பேரை சொன்னாலே எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் அவர் படத்தை வேற கேட்கணுமா, என்று அதிரடியான பதில் தந்து அஜீத்குமார் ரசிகர்களை வெகுவாக அசத்தி இருக்கிறார்.

சற்று முன்