நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த மாத இறுதிக்குள் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடையும் என்று கூறப்படுகிறது. ரஜினி நடித்த காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டு வருகின்றன. வேட்டையன் கேரக்டரில் ரஜினிக்கு மகனாக பகத் பாசில் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். மார்ச் மாத கடைசி வாரத்தில், அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக இருக்க வாய்ப்புள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது.
இதற்கிடையே வரும் பிப்ரவரி 9ம் தேதி ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ஷனில், லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் லால் சலாம் படம் வெளியாகிறது. இதில் கேமியோ ரோல் என்றாலும், 45 நிமிடங்கள் வரை ரஜினி இந்த படத்தில் நடித்திருக்கிறார். 22 சீன்களில் வருகிறார். ரஜினிக்கு என சண்டைக்காட்சிகளும் உள்ளன.
வேட்டையன், லோகேஷ் கனகராஜ் படங்களுக்கு பிறகு, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில்தான் ரஜினி நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது அதில் நடிப்பதற்கு முன்னதாக, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதும், அந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.
இப்போது இதில் புதிய தகவல் ஒன்று இப்போது லேட்டஸ்ட் ஆக வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பது குறித்து இன்னும் ரஜினி முடிவு செய்யவில்லை. ஏற்கனவே ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனமும் ரஜினி படத்தை தயாரிக்க கேட்டுள்ளதாம். இதுவும் ரஜினியின் கவனத்தில் இருக்கிறது. ஆக, இரண்டில் எதற்கு வாய்ப்பு என்பதில் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதனால் ரஜினியின் புது கண்டிசன் என்னவென்றால், மாரி செல்வராஜ் இயக்கும் தனது 172 வது படத்தில் தனது சம்பளம் ரூ. 210 கோடி. அதற்கு சம்மதிக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓகே சொல்ல ரெடியாக இருக்கிறார் ரஜினிகாந்த். கோட் படத்துக்கு விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், ரஜினி தனது சம்பளத்தை ரூ. 210 கோடியாக உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.





