- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பகத் பாசிலை விட சிறந்த சீனியர் நடிகர்கள் இருக்கிறார்கள் - நடிகர் மோகன்லால் பேசியது...

நடிகர் பகத் பாசிலை விட சிறந்த சீனியர் நடிகர்கள் இருக்கிறார்கள் – நடிகர் மோகன்லால் பேசியது இணையத்தில் வைரல்!

- Advertisement -

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். கடந்த 2 மாதங்களுக்கு முன் மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான படம் தொடரும். இந்த படத்தில் மோகன்லால் டாக்ஸி டிரைவராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சோபனா நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

டாக்ஸி டிரைவர் மோகன்லாலின் வளர்ப்பு மகனை, போலீசார் வன்மமாக அடித்துக் கொன்று விடுகின்றனர். பிறகு மோகன்லாலின் டாக்ஸியிலேயே அந்த சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் அது தன் வளர்ப்பு மகன்தான் என்று தெரிய வர மோகன்லால் அவர்களை பழிவாங்குவதுதான் தொடரும் படத்தின் கதை.

- Advertisement -

தொடரும் படத்தை அடுத்து இயக்குனர் சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மோகன்லால் நடித்திருக்கும் படம் ஹிருதயபூர்வம். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

ஹிருதயபூர்வம் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். மேலும் முக்கிய கேரக்டரில் பூவே உனக்காக பட நடிகை சங்கீதா மற்றும் நடிகர் பிரமேலு பட நடிகர் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் மோகன்லால் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அவரிடம் ஒரு மாணவர், நீங்கள் கேரளாவை சேர்ந்தவரா, உங்களுக்கு பகத் பாசிலை தெரியுமா, அவர்தான் எனக்கு பிடித்த நடிகர். மிகச்சிறந்த நடிகர் என்று கூறுகிறார். அப்போது மோகன்லால், பகத் பாசிலா? அவரை விட சிறந்த சீனியர் நடிகர்களும் இருக்கிறார்கள் என்று சொல்ல, இல்லை பகத் பாசில் தான் சிறந்த நடிகர் என்று அவர் கூறுவது போல டீசரில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

நடிகர் பகத் பாசில் குறித்து நடிகர் மோகன்லால் பேசிய இந்த காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து மோகன்லால் படத்தில் பகத் பாசில் பெயர் இடம்பெற்று இருப்பது குறித்து கேரளா ரசிகர்கள் மத்தியில் சந்தோஷமும் உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை விட சிறந்த சீனியர் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று மோகன்லால் சொன்னதால் தங்களது விமர்சனத்தையும் கூறி வருகின்றனர். இது தற்போது கேரளா சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்