- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் விஜயை ஆகியோரை தொடர்ந்து நடிகர் அஜீத்குமாரின் 64வது படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார் -...

கமல் விஜயை ஆகியோரை தொடர்ந்து நடிகர் அஜீத்குமாரின் 64வது படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார் – போட்றா வெடிய என குதூகலித்த ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடிக்கும் 64வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் டைரக்ட் செய்ய இருக்கிறார். இப்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் அஜீத்குமார் வரும் அக்டோபரில் கார் ரேஸை முடிக்க உள்ளார். பிறகு நவம்பரில் ஏகே 64 படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 260 கோடி முதல் அதிகபட்சமாக ரூ. 275 கோடி வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அஜீத்குமார் சம்பளம் ரூ. 180 கோடி, ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் ரூ. 12 கோடி என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் ஷூட்டிங்கை நவம்பரில் துவங்கி, 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த 4 மாதங்கள் மட்டுமே அஜீத்குமார் கால்ஷீட் தந்திருக்கிறார். அடுத்து 2026ம் ஆண்டு மார்ச்சில் துவங்கும் கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதற்குள் அஜீத்குமார் நடிக்கும் காட்சிகளை எடுத்து முடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.

இனிமேல் அஜீத்குமார் ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறது. அதாவது 6 மாதம் சினிமாவில் நடிக்கவும் 6 மாதம் கார் ரேஸில் பங்கேற்கவும் அஜீத்குமார் முடிவு செய்திருக்கிறார். அதனால் ஏகே 64 படம் வருகிற மே 1ம் தேதி அல்லது ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு லேட்டஸ்ட் தகவலாக ஏகே 64 படத்தில் முக்கியமான ஒரு கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. முதன்முறையாக அஜீத்குமார், மோகன்லால் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

ஏற்கனவே நடிகர் கமலுடன் உன்னைப் போல் ஒருவன், விஜயுடன் ஜில்லா ஆகிய படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். குட்நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரகன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ஒன்றில் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது அஜீத்குமார் படத்திலும் மோகன்லால் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்