- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி நானும் ஹீரோதான் - தமிழ் சினிமாவில் இன்னொரு தரமான சம்பவம்… கதையின் நாயகனாக ...

இனி நானும் ஹீரோதான் – தமிழ் சினிமாவில் இன்னொரு தரமான சம்பவம்… கதையின் நாயகனாக எம்எஸ் பாஸ்கர் அறிமுகம்!

- Advertisement -

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களுக்கு பின்னணி குரல் அதாவது டப்பிங் பேசிக்கொண்டு இருந்தவர் எம்எஸ் பாஸ்கர். பிறகு சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி தொடரில் காது கேளாதவராக பட்டாபி என்ற கேரக்டரில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

அதன்பிறகு எங்கள் அண்ணா படத்தில் ரோட்டில் குடிபோதையில் வடிவேலு மற்றும் பாண்டியராஜனுடன் பிரச்னை செய்யும் ஒரு லோக்கல் ரவுடி கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து குரு என் ஆளு திண்டுக்கல் சாரதி சிவகாசி தெய்வத்திருமகன் இந்தியா பாகிஸ்தான் மொழி டிமாண்டி காலனி தசாவதாரம் என பல படங்களில் காமெடி செய்த எம்எஸ் பாஸ்கர் பிரபல நடிகராக மாறினார்.

- Advertisement -

தொடர்ந்து சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த அவர் ஏ1 சபாபதி போன்ற படங்களில் சந்தானத்துக்கு அப்பா கேரக்டரில் நடித்தார். மேலும் பார்க்கிங் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலும் எம்எஸ் பாஸ்கரின் நடிப்பு கவனம் பெற்றதாக இருந்தது. எத்தகைய கேரக்டர் என்றாலும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பும் குரலும் வேற லெவலில் இருந்துவருகிறது.

இந்நிலையில் குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்த படத்தின் தொடக்க விழா பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் காமெடி குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் எம்எஸ் பாஸ்கர் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் நடிகை ஸ்மீகா அருள்தாஸ் முனீஸ்காந்த் ஸ்ரீநாத் சிவா அரவிந்த் பிரியதர்ஷினி அஞ்சலி ராவ் அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். காமெடி ஹாரர் பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்துக்கு ரஞ்சன் ராஜ் இசையமைக்கிறார். பார்க்கிங் படம் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நடிகர் எம்எஸ் பாஸ்கர், நடிகர் பிராங்ஸ்டர் ராகுலுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடிக்கிறார்.

இந்த படத்தில் இரட்டை கதாநாயகர்களில் ஒருவராக நடிகர் எம்எஸ் பாஸ்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் கதாநாயகன்களாக மாறிவிட்டனர். அந்த வரிசையில் இப்போது எம்எஸ் பாஸ்கரும் இணைந்து விட்டார். ஆனால் கதைக்கேற்ற கதைக்களத்தில் ஹீரோவாக நடித்தால்தான் எடுபடும் என்பது அனுபவசாலியான எம்எஸ் பாஸ்கருக்கு நன்றாக தெரியும் என்பதால், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க அடம்பிடிக்காமல் குணச்சித்திர நடிப்பிலும் அவர் ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்