- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்கும் 100வது படம் - தமிழில் சசிக்குமார் நடித்த அந்த படத்தின்...

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடிக்கும் 100வது படம் – தமிழில் சசிக்குமார் நடித்த அந்த படத்தின் ரீமேக் தானாம் அது – இது வேற லெவலா இருக்குதே…?

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாகர்ஜூனா. இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், நடிகை அமலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். தமிழில் கொடி பறக்குது மாப்பிள்ளை அக்னி நட்சத்திரம் சத்யா மெல்லத் திறந்தது கதவு போன்ற படங்களில் நடித்த பிரபல நடிகை தான் அமலா என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நாகர்ஜூனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் நடிகர் நாக சைதன்யா. அவர் நடிகை சமந்தாவை காதலித்து கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டார். 4 ஆண்டுகளில் அவர்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை, நாக சைதன்யா 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

நடிகர் நாகர்ஜூனா தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். தமிழிலும் பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். உதயம் இதயத்தை திருடாதே ரட்சகன் தோழா பயணம் சந்திரலேகா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த குபேரா படத்திலும் முக்கிய கேரக்டரில் நாகர்ஜூனா நடித்திருந்தார்.

ஆனால் தெலுங்கில் குபேரா படத்துக்கு கிடைத்த வரவேற்பு தமிழில் குபேரா படத்துக்கு கிடைக்கவில்லை. குபேரா படத்தை பொருத்த வரை நான்தான் ஹீரோ. அந்த படத்தின் கதை என்னை மையப்படுத்திய நகர்ந்தது. அந்த படத்தில் நடித்த போது என்னை நான் ஹீரோவாக தான் உணர்ந்தேன் என்று நாகர்ஜூனா பேசியிருந்தது இணையத்தில் வைரலானது. தனுஷ் ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் நாகர்ஜூனா நடிக்கும் அவரது அடுத்த படம் 100வது படமாகும். இந்த படம் குறித்த முக்கிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த படம் தமிழில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி படத்தின் ரீ மேக் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில்தான் நாகர்ஜூனா இப்போது நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படம் அயோத்தி. இது சசிக்குமார் நடித்த படங்களில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருந்தது. அதனால் அயோத்தி படத்தின் ரீமேக் தான் நாகர்ஜூனா நடிக்கும் 100வது படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகர் நாகர்ஜூனாவே சொந்தமாக தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்