- Advertisement -
தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக இருந்த நெப்போலியன் பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் நெப்போலியன் கூறியதாவது, சென்னை ராயப்பேட்டையில் நான் வசித்து வந்த வீட்டை விற்று விட்டேன். இப்போது சென்னைக்கு வந்தால் நட்சத்திர ஓட்டலில் தான் தங்குகிறேன். நான் ஒரு காலத்தில் அரசியலில் எம்எல்ஏவாக அமைச்சராக இருந்தேன். நான் இன்னும் அந்த வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பலரும் மனு கொடுத்து உதவி கேட்கிறார்கள். நான் எப்போதாவது ஒருமுறைதான் இந்தியா வருகிறேன். அப்போது வீட்டில் ஆயிரக்கணக்கான மனுக்கள் சேர்ந்திருக்கும். என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை. அதனால் மக்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே வீட்டை விற்று விட்டேன் என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கிறார்.





