தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து பிறகு நடிகராக மாறியவர் நட்டி நடராஜ். நடிகர் விஜய் நடித்த யூத் புலி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். சதுரங்க வேட்டை நம்ம வீட்டுப்பிள்ளை முத்துக்கு முத்தாக சமீபத்தில் வெளியான கருப்பு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
நடிகர் நட்டி நடராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டிஎன் 2026. அரசியல் கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் தம்பி இராமையா எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். தம்பி இராமையா மகன் உமாபதி இந்த படத்தை இயக்கி இருந்தார். கதை திரைக்கதையை தம்பி இராமையாவே எழுதியிருந்தார்.
தவெக தலைவர் விஜயை கலாய்க்கும் விதமான இந்த படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகன். அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதால் திரைக்கு வராத அந்த நேரத்தில் அவரை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் வெளியானது பெரிய சர்ச்சையை கிளப்பியது.
டிஎன் 2026 படத்தின் டிரெய்லர் காட்சிகள் வெளியான நிலையில் விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜயின் கெட்டப்பில் நடிகர் நட்டி நடராஜ் அதில் நடித்திருந்தார். அப்போது சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் தனது பதிவில், படத்தில் மட்டும் ஏதாவது தவறாக இருந்தால் நீ செத்தே என்று நட்டி நடராஜை கூறியிருந்தார். அதற்கு அவர், தம்பி தப்பு என பதில் கூறியிருந்தார். இந்த வசனம் டிரண்டிங் ஆகி வைரலானது.
இதனால் விஜய் ரசிகர்களுக்கும் நட்டி நடராஜூக்கும் இடையில் எக்ஸ் பக்கத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்தது. பலரும் நட்டி நடராஜை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் நட்டி நடராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் 2 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் யாராவது என்னிடம் ஆபாச மொழிகளை பயன்படுத்தினால் நானும் பயன்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.
இன்னொரு பதிவில், இது கடைசி எச்சரிக்கை. இனிமேல் யாராவது என்னை வசை பாடினால் நானும் அவர்களை திரும்ப வசைப்பாடுவேன். என்ன நடந்தாலும் கவலை இல்லை என்றும் ஆவேசமாக கூறியுள்ளார். இதற்கும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. டிஎன் 2026 படத்தில் நடித்த காரணத்தால் விஜயின் நெருக்கமான நண்பராக இருந்தும் இப்போது அவரது ரசிகர்களுக்கு நட்டி நடராஜ் விரோதியாக மாறிவிட்டார்.





