- Advertisement -
திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள்விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மதுபோதையில் வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் இதனால் ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. திறனற்ற தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் கொலை கொள்ளை என நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தனி பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதால் மட்டும் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பை கொடுத்து விட போகிறார்கள்? முதலமைச்சர் விஜய் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்று கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார்.





