- Advertisement -
Homeபொழுதுபோக்குநீட் தேர்வு விவகாரத்தில் போராடுபவர்களை ஏளனம் செய்யாதீங்க - இயக்குனர் மோகன் ஜிக்கு மூடர்கூடம் பட...

நீட் தேர்வு விவகாரத்தில் போராடுபவர்களை ஏளனம் செய்யாதீங்க – இயக்குனர் மோகன் ஜிக்கு மூடர்கூடம் பட நடிகர் நவீன் எதிர்ப்பு!

- Advertisement -

டெல்லியில் ஜந்தர் மந்தரில் நடந்து வரும் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் இயக்குனர்கள் பா ரஞ்சித் வெற்றிமாறன் அமீர் மற்றும் நடிகைகள் ரேவதி ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டும். மாணவர்களின் குரலுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர்கள் பேசுகையில் வலியுறுத்தினர். இது குறித்து திரவுபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

அதில் இயக்குனர் மோகன்ஜி, இயக்குனர் வெற்றி மாறனின் கருத்தை விமர்சித்திருந்தார். இதுகுறித்து அந்த பதிவில் அவர், நீட் வேண்டாம் என்றால் படிக்கிற பசங்க அதுவா பிழைத்துக் கொள்ளுமா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நடிகர் நவீன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, மோகன் ஜி அண்ணே. படிக்கிற பசங்க அதுவாக எல்லாம் பிழைத்துக்கொள்ளாது அண்ணே. 40 வருடங்களாக இட ஒதுக்கீடு மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டம் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு கொண்டுவந்த பல்வேறு திட்டங்களால் தான் இந்தியாவில் கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு குலக்கல்வி திட்ட எதிர்ப்பு என பல போராட்டங்களின் மூலமாகத்தான் இந்த முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. போராட்டங்கள்தான் நம் வாழ்க்கையை நம்மை காப்பாற்றும். கடவுளுக்காக போராடும் நீங்கள் நம் சக மனிதர்களுக்காக போராடவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அதற்காக போராடுபவர்களை ஏளனம் செய்ய வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

நடிகர் நவீனின் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இது வேகமாக வைரலாகி வருகிறது. ஒருபுறம் மோகன் ஜி கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் நவீனின் பதிவை வரவேற்பவர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இந்த கருத்து முதல் தற்போது சமூக வலைதளங்களில் சூடு பிடித்துள்ளது. அரசியல் களத்தை தாண்டி சினிமா வட்டாரத்திலும் நீட் தேர்வு விவகாரம் இப்போது பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்