- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவர் மாதிரி இருந்தால், தலைகீழாக தான் நடப்பேன், ஆனால் அவருக்கு அந்த பிரச்னை இருக்கிறது...

நான் அவர் மாதிரி இருந்தால், தலைகீழாக தான் நடப்பேன், ஆனால் அவருக்கு அந்த பிரச்னை இருக்கிறது – இளையராஜா குறித்து ஓபனாக பேசிய நடிகர் பார்த்திபன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில், இயக்குனர் கே பாக்யராஜிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிசெய்தவர் நடிகர் பார்த்திபன். கே பாக்யராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் என்ற படத்தில், நடிகர் சிவாஜி கணேசனுடன் பார்த்திபன், போஸ்ட்மேன் கேரக்டரில் நடித்திருந்தார். அப்படி ஒரு அற்புதமான வாய்ப்பை பார்த்திபனுக்கு வழங்கியவர் பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு பார்த்திபன் புதிய பாதை என்ற படத்தை இயக்கி நடித்தார். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நாயகியாக நடித்த சீதாவை பார்த்திபன் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் ஒற்றுமையான தம்பதிக்கு எடுத்துக்காட்டாக இருந்த இவர்கள், ஒரு கட்டத்தில் திடீரென பிரிந்துவிட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தனது பங்களிப்பை சிறப்பாக பார்த்திபன் செய்து வருகிறார். அவருடைய ஒத்தச்செருப்பு, இரவின் நிழல் படங்கள் மிகவும் வித்யாசமாக உருவாக்கப்பட்டிருந்தன.

படம் முழுக்க பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்த ஒத்தச்செருப்பு படம் பெரிய அளவில் வரவேற்பை, பாராட்டை பெற்றது. இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதே போல், இரவின் நிழல் என்ற படமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக, தொழில்நுட்பரீதியாக தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்நிலையில் இசைஞானி இளையராஜா மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர் நடிகர் பார்த்திபன். அவர் இயக்கிய, நடித்த பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபகாலமாக இசைஞானி இளையராஜா அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது ஆதங்கத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

நடிகர் பார்த்திபன் கூறியதாவது, இளையராஜாவை யாருமே விமர்சிக்க கூடாது என்பது என்னுடைய விருப்பம். அவர் செய்த சாதனைகளை எல்லாம் நான் செய்திருந்தால் நான் தலைகீழாக தான் நடந்திருப்பேன். ஆனால் அவர் அத்தனையும் விட்டுவிட்டு அடக்கமாக இருக்கிறார். அவர் தலைகனத்தோடு இருக்கிறார் என்று பல பேர் சொல்லி கேட்டிருக்கிறேன். இதெல்லாம் அவர்களுடைய சிந்தனை. அவருக்கு கவர்ச்சியாக பேசி சபையில் இருப்பவர்களை கவரத் தெரியாது. அதுதான் அவரிடம் இருக்கும் பிரச்னை அவருக்கு தெரிந்தது எல்லாம் இசை மட்டும்தான் என்று கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்