- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது போன மாசம் இது இந்த மாசம், குருநாதர் கே பாக்யராஜ் சீடர் ஆர் பார்த்திபன்...

அது போன மாசம் இது இந்த மாசம், குருநாதர் கே பாக்யராஜ் சீடர் ஆர் பார்த்திபன் பேச்சால் வெடித்த விவகாரம் – விளாசித் தள்ளும் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த சில நாட்களாக கன்னாபின்னாவென சர்ச்சையில் சிக்கி வரும் நடிகர் பார்த்திபன் இப்போது நான் நாயுடு சமூகத்தை சேர்ந்தவன் என்று திரைப்பட விழா ஒன்றில் பேசி மீண்டும் கடும் விமர்சனத்தில் சிக்கி இருக்கிறார். கடந்த வாரத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், திரையில் திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டது. அப்போது பார்த்திபன் விவகாரமாக பேசியது வில்லங்கமாக மாறியது.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கேரக்டரை குறிப்பிட்டு, இந்த குந்தவையை கொஞ்ச நேரம் வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது. அவர் வெளியே வராமல் இருப்பதே பல பிரச்சனைகளை தவிர்க்க உதவும் என்று கிண்டலாக பேசினார். நடிகர் விஜயுடன் திரிஷா சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பார்த்திபனின் இந்த உள்நோக்கம் கொண்ட கிண்டலான பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பார்த்திபனின் இந்த கிண்டலுக்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் காட்டமான ஒரு பதிலடி கொடுத்தார். பிறகு பார்த்திபன் திரிஷாவுக்கு வாழ்த்துகள் சொன்னதால் இந்த விவகாரம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஒரு திரைப்படத்தின் விழாவில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் பேசுகையில், நான் நாயுடு சமூகத்தை சேர்ந்தவன். சென்னையில் வளர்ந்ததால் நன்றாக தமிழ் தெரியும். தெலுங்கு மொழி எனக்கு சரியாக தெரியாது. இந்த படத்தின் வெற்றி விழாவில் நிச்சயம் நான் தெலுங்கில் நன்றாக பேசுவேன் என்றும் பார்த்திபன் கூறினார்.

- Advertisement -

தமிழ்நாட்டில் புரட்சியும் மனிதநேயமும் பேசும் நடிகர் பார்த்திபன் ஆந்திராவில் குறிப்பிட்ட சமூக அடையாளத்தை பெருமையாக பேசியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். தமிழ் சினிமாவில் அனுபவம் கொண்ட ஒரு மூத்த கலைஞர் பார்த்திபன். பொது மேடையில் தனது சாதி அடையாளத்தை அவர் முன்னிறுத்தி பேசியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

முற்போக்கான கருத்துக்களை பேசும் கவிதைகளாக எழுதும் இயக்குனர் பார்த்திபன், இப்படி சாதி பெருமை பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இவரது குருநாதர் இயக்குனர் கே பாக்யராஜூம் இதே போல் நடந்த நாயுடு சமூக சங்க விழாவில் பங்கேற்று தனது சாதி பெருமை பேசியது பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளானது. தனது குருநாதரை போலவே இப்போது அவரது சீடர் பார்த்திபனும் ஜாதி குறித்து பேசியிருப்பது இன்னும் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்