- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவங்களுக்கு கோவில் கட்டி கும்பிடணும், கடவுளால் அனுப்பப்பட்ட தேவதைகள் அவர்கள் - வில்லன் நடிகர் பொன்னம்பலம்...

அவங்களுக்கு கோவில் கட்டி கும்பிடணும், கடவுளால் அனுப்பப்பட்ட தேவதைகள் அவர்கள் – வில்லன் நடிகர் பொன்னம்பலம் நெகிழ்ச்சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் பொன்னம்பலம். ரஜினி கமல் விஜயகாந்த் படங்களில் அவருடன் மோதும் ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவராக தான் பொன்னம்பலம் இருந்தார். பிறகு அவருக்கு தனது படங்களில் வில்லன் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

குறிப்பாக கபாலி கேரக்டரில் அவர் பல படங்களில் நடித்ததால் அவரை ரசிகர்கள் பலரும் பொன்னம்பலம் என்று நினைவில் வைத்திருப்பது இல்லை. கபாலி என்றால் தான் பொன்னம்பலம் முகமே நினைவுக்கு வரும். குறிப்பாக நாட்டாமை படம் பொன்னம்பலத்துக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது.

- Advertisement -

நிறைய படங்களில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அவரை காமெடி நடிகராக்கிய பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு உண்டு. மைக்கேல் மதன காமராசன் படத்தில் பொன்னம்பலத்தை சிறிய காமெடி கேரக்டரில் நடிக்க செய்தார் கமல்ஹாசன்.

இந்தியன் படத்தில் ஒரு சண்டை காட்சியில் கமலுடன் பொன்னம்பலம் நடித்திருந்தார். அதே போல் ரஜினிகாந்த் விஜய் அஜீத்குமார் சரத்குமார் சத்யராஜ் உள்ளிட்டோர் படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, நர்ஸ்கள் எல்லோரையும் கோவில் கட்டி கும்பிடனும். 20 வயசுல அவர்களுக்கு அவ்வளவு சகிப்புத்தன்மை இருக்குன்னா அவங்களுக்கு கோவில் கட்டித் தான் கும்பிடனும். நாம ஹாஸ்பிடல்ல முடியாம இருக்கும்போது நர்ஸ் நம்மள கவனிக்கிறது இருக்கே, அது உன்னதமானது.

நம்ம குழந்தை ஆயி போய்ட்டால் நம்மை அதை துடைக்க சொன்னா நமக்கு மனசு வராது. கஷ்டமா இருக்கும். ஆனா நம்ம நாத்தத்தை பொறுத்துக்கிட்டு அவங்க நம்மள கவனிச்சிக்கிறாங்க. உண்மையாவே அவங்க தேவதைகள். கடவுளால் அனுப்பப்பட்ட தேவதைகள் யாருன்னா செவிலியர்கள்தான் என்று நடிகர் பொன்னம்பலம் அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்