தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒருவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். இவரை கபாலி என்று சொன்னால்தான் ரசிகர்களின் நினைவுக்கு உடனே வருவார். சில படங்களில் காமெடி ரோலிலும் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு முறை போட்டியாளராக கலந்து கொண்டார்.
சமீபமாக நடிகர் பொன்னம்பலம் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து மிகவும் பலவீனமான நிலையில் உள்ளார். வீல் சேரில் அமர்ந்தபடி அவர் இப்போது காணப்படுகிறார். ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் பொன்னம்பலம் தனது சொந்த அண்ணனே தன்னை அழிக்க பல சதி வேலைகளை செய்ததாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி நடிகர் பொன்னம்பலம் கூறியதாவது, நான் நன்றாக பலமாக தான் இருந்தேன். ஆனால் குடும்பத்தினரிடையே இருந்த பொறாமையால் தான் எனக்கு இந்த நிலமை வரக் காரணம். எங்க அப்பாவுக்கு 4 மனைவிகள். நாங்கள் அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாக தான் இருந்தோம். நான் சினிமாவில் கொஞ்சம் வளர்ச்சி அடையும் போது என் அண்ணனுக்கு 42 வயதாகிவிட்டது.
அவர் பாம்குரோவ் ஓட்டலில் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னார். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். சின்னதாக ஏதாவது ஒரு மண்டபத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அதனால் வருமான வரித்துறை பிரச்சனையில் என்னை அவர் மாட்டிவிட்டார். அதன் பிறகு ஒருநாள் இரவு வீட்டுக்கு அருகில் பள்ளம் தோண்டி எனக்கு சூனியம் வைத்தார்.
ரசத்தில் குதிரை முடியை தூள் செய்து கலக்கி எனக்கு கொடுக்க செய்து விட்டார். குதிரை முடி குடலில் ஒட்டி 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக எனக்கு பேதி ஏற்பட்டதால் திடமாக இருந்த என் உடல் எடை குறைந்தது. அப்புறம் எனக்கு பிரஷர் சுகர் வந்தது. அதனால் சூட்டிங் செல்ல முடியாமல் போனது. என்னுடைய பிறந்தநாளில் அண்ணன் என்னை பீர் குடிக்குமாறு வற்புறுத்தினார். நான் சிறிது பீர் குடித்தேன். அதில் என்ன கலந்தார் என்றே தெரியவில்லை.
அதுதான் எனக்கு கிட்னி வரை பாதித்துவிட்டது. ஆரோக்கியமாக உடம்பை பராமரிப்பதில் நான் அதிக கவனம் செலுத்துவேன். ஆனால் நான் உருமாறியது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அதன்பின்பு ஒரு நாள் நடந்த சண்டையில் என்னை கொலை செய்ய முயற்சி செய்ததை அண்ணன் ஒப்புக்கொண்டார் என்று நடிகர் பொன்னம்பலம் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்





