- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமல்ஹாசனிடம் சிவாஜி மகன் ராம்குமார் வைத்த கோரிக்கை, கமல் என்ன பண்ணினார் தெரியுமா? -...

நடிகர் கமல்ஹாசனிடம் சிவாஜி மகன் ராம்குமார் வைத்த கோரிக்கை, கமல் என்ன பண்ணினார் தெரியுமா? – நடிகர் பிரபு கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு. ராம்குமார் சினிமா தயாரிப்பாளராக உள்ளார். அறுவடை நாள் மைடியர் மார்த்தாண்டன் எல்கேஜி ஐ போன்ற சில படங்களில் ராம்குமார் நடித்திருக்கிறார். நடிகர் பிரபு சினிமாவில் நடித்து வருகிறார். சமீபகாலமாக விளம்பரங்களிலும் அதிகமாக பிரபு நடிக்கிறார். அவரது மகன் விக்ரம் பிரபுவும் சினிமா நடிகராக உள்ளார்.

ராம்குமார் மகன் துஷ்யந்த், ஜெகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிப்பதற்காக ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி வட்டிக்கு கடன் வாங்கிய நிலையில், இப்போது அது 30 சதவீத வட்டியுடன் ரூ. 9.39 கோடியாகி உள்ளது. அதன் காரணமாக சென்னை தி நகர் போக் ரோட்டில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரத்தில் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பிரபு கூறியதாவது, என்னிடம் கமல் அண்ணா பேசும் போது, உங்க ரெண்டு பேரையும் விட சிவாஜி மடியில் அதிக நாள் இருந்தவன் நான்தான் என்பார். அதே போல் அப்பாவும் எனக்கு திரையுலக வாரிசு என்றால் அது கமல்தான் என்பார். அம்மாவை கமலா என்று அன்பாக அழைப்பது போல, கமலையும் கமலா என்றுதான் அப்பா அன்பாக அழைப்பார்.

அவர் அப்பாவுடன் எப்போதுமே அப்படிதான் பழகினார். எங்களுடன் இன்று வரை அப்படிதான் கமல் அண்ணா பழகிக்கொண்டு இருக்கிறார். வெற்றிவிழா என்ற படத்தை எங்களது சிவாஜி புரடக்சன்ஸ் தயாரிக்கிறது. அதில் கமல் நாயகனாக நடிக்கிறார். நானும் அந்த படத்தில் நடிக்கிறேன்.

கமலும் ராம்குமாரும் ரொம்ப குளோஸ் பிரண்ட்ஸ். அதனால், இந்த படத்தில் நீங்க தம்பிகூட ஒரு டான்ஸ் பண்ணனும் என்று கேட்டுக்கொண்டார். கமலும் ஓகே ஆடட்டுமே என்று சொல்லிவிட்டார். ஆனால் எனக்காக அவர் அந்த படத்தில் என்னுடன் ஆடும் போது அவரோட ஹெவியான டான்ஸ் மூவ்மென்டை எல்லாம் குறைச்சுக்கிட்டார்.

ஏனென்றால் கமல் சார் டான்ஸ் எப்படி ஆடுவார் என்பது எல்லோருக்குமே தெரியும். நான் வீட்டில் 2 நாள் ரிகர்சல் பண்ணினேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் சார் ஒரு நாள் ரிகர்சல் பண்ணிட்டு போயிட்டார். அங்கும் நான் 2 நாள் ரிகர்சல் பண்ணினேன். எனக்காக கமல் சார் டான்ஸை ஈஸி பண்ணிக்கிட்டு என்கூட ஆடினார் என்று நடிகர் பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்