- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகனுக்காக விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியுமா? சினிமா புகழை அரசியலில் ஆதாயமாக்க கூடாது -...

நடிகனுக்காக விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியுமா? சினிமா புகழை அரசியலில் ஆதாயமாக்க கூடாது – நடிகர் விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

- Advertisement -

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 ஓட்டுப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை நெருங்கியுள்ள நிலையில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி தமிழக வெற்றிக்கழகம் நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் வெற்றியை எதிர்நோக்கி தங்கள் வேட்பாளர்களுடன் களத்தில் போராடி வருகின்றன.

அனல் பறக்கும் பரப்புரையில் அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எதிர்க்கட்சிகள் குறித்து பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார்.

- Advertisement -

பழனியில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது, 2026 சட்டசபை தேர்தல் திராவிட மாடல் அடிமை மாடல் சினிமா மாடல் என மூன்று அணிகளுக்கு இடையேயான மோதல். நடிகனுக்காக விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுக்க முடியாது.
சினிமா மாடல் என்று ஒன்று இருக்கிறது.

ஒரே படத்தில் நடித்து காசு சம்பாதித்து விடலாம். ஸ்டார் ஆகி விடலாம். சினிமாவில் டாக்டராகலாம். இன்ஜினியர் ஆகலாம். ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். அரசியலில் அப்படியே முதல்வர் ஆகிவிட முடியாது. என்னுடைய அளவுக்கு விஜய் அரசியல் பேசியிருக்கிறாரா? இத்தனை ஆண்டுகளில் தமிழக மக்களுக்கோ தமிழ் மொழிக்கோ தன்மானத்திற்கோ பிரச்சனை வந்த போது அவர்களுக்காக அவர் நின்று இருக்கிறாரா?

- Advertisement -

நடிகர்கள் மீது மக்கள் வைக்கிற அன்பு அவர்கள் திறமைக்கானது தான். அரசியலுக்கானது அல்ல. அதை நடிகர்கள் அரசியலுக்காக பயன்படுத்துகிறார்கள். நடிகனுக்காக விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுக்க முடியாது. அரசியல் வேற சினிமா வேற. அந்த அன்பு வேற. இந்த அன்பு வேற. திராவிட மாடல் வேண்டுமா அடிமை மாடல் வேண்டுமா சினிமா மாடல் வேண்டுமா?

என்னை பொறுத்தவரை அரசியலை மக்கள் நம்ம பண்ணனும். ஜெயிச்சவங்க வேலை பார்க்கணும். நம்ம அரசியல் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த அணி நமக்காகவும் தமிழுக்காகவும் நிற்கும் என்பதை புரிந்து அதை தேர்ந்தெடுக்க வேண்டும். கடைசியாக ஒன்று சொல்கிறேன். இது திமுக அணிக்கும் அதிமுக அணிக்கும் நடக்கும் தேர்தலா என்றால் இல்லை. விஜய் சொல்கிற மாதிரி திமுகவுக்கும் தவெகவுக்கும் நடக்கிற தேர்தலா என்றால் அதுவும் இல்லை. இது ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் நடக்கிற ஒரு தேர்தல் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்