- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த தனது பெற்றோர், விபத்தில் உயிரிழந்த முதல் மனைவிக்காக காமெடி நடிகர் மதுரை முத்து செய்திருக்கிற...

மறைந்த தனது பெற்றோர், விபத்தில் உயிரிழந்த முதல் மனைவிக்காக காமெடி நடிகர் மதுரை முத்து செய்திருக்கிற அந்த விஷயம் – நீங்க வேற லெவல் ப்ரோ..!

- Advertisement -

மற்றவர்களை தனது பேச்சுத் திறமையால், நகைச்சுவை உணர்வால் சிரிக்க வைப்பவர்களை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. சினிமாவில் காமெடி நடிகர்கள் நிலைத்து நிற்க காரணமே அவர்கள், ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வித்தையை கற்றதுதான். அப்படிபட்ட ஒரு சிறந்த நகைச்சுவையாளராக மக்கள் மனங்களை கவர்ந்தவர் மதுரை முத்து.

சன் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில், ஸ்டாண்ட் அப் காமெடி சொல்லி ரசிகர்களை தனது நகைச்சுவை பேச்சால் கவர்ந்தவர் மதுரை முத்து. இப்போதும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். அகிலன், மதுரை வீரன், சபாபதி, குற்றம் குற்றமே போன்ற சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

- Advertisement -

இப்போது விஜய் டிவியில் ஜெயிக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி, ஞாயிறு கலாட்ட போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் பல பட்டிமன்றங்களில் நடுவராக பங்கேற்று பேசி வருகிறார். பள்ளிகள், கல்லூரிகள், கோவில் விழாக்களில் சிறப்பு பேச்சாளராக மதுரை முத்து தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகிறார்.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடியை அடுத்துள்ள அரசபட்டி பகுதியை சேர்ந்தவர் மதுரை முத்து. இவரது மனைவி பெயர் லேகா என்கிற வையம்மாள். 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டில் நடந்த கார் விபத்தில் அவர் உயிரிழந்தார். அதன்பிறகு தனது மனைவியின் தோழியான பல் டாக்டர் நீத்து என்பவரை மதுரைமுத்து 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் மறைந்த தனது அப்பா, அம்மாவுக்காகவும், தனது மனைவி லேகா நினைவாகவும் அரசபட்டியை அடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் கோவில் கட்டி வருகிறார் மதுரை முத்து. தற்போது அந்த கோவில் கட்டுமான பணிகளை மதுரை முத்து நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மதுரை முத்து ஷேர் செய்திருக்கிறார். தனது பெற்றோர் மீதும், மறைந்த தனது முதல் மனைவி மீதும் கொண்ட பேரன்பால் அவர் கோவில் கட்டி வருவது, அவரது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மற்றவர்களை சிரிக்க வைக்கும் மதுரை முத்து, ஒரு பிள்ளையாய் பெற்றோருக்கும், ஒரு கணவராய் இறந்த மனைவிக்கும் சொந்த கிராமத்தில் கோவில் கட்டுவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்