- Advertisement -
Homeபொழுதுபோக்குமைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா… வலுக்கும் எதிர்ப்பு - கர்நாடகா...

மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா… வலுக்கும் எதிர்ப்பு – கர்நாடகா அமைச்சர் தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் நடிகை தமன்னா. ஆரம்பத்தில் வியாபாரி கல்லூரி படிக்காதவன் சுறா பையா வீரம் போன்ற படங்களில் நடித்த தமன்னா பிறகு தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். அதன்பிறகு இந்திக்கு சென்ற அவர் சில வெப் சீரிஸ்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து அங்கும் பிரபலமானார்.

இந்நிலையில் கர்நாடகாவில் அரசு சார்பில் தயாராகி வரும் பிரபலமான மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு இவர் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டு அதற்காக தமன்னாவுக்கு 6.2 கோடி ரூபாய் தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் பல கன்னட அமைப்புகள் மைசூர் சாண்டல் சோப் தூதராக நியமிக்க கன்னடத்திலேயே தகுதியான நடிகர்கள் நடிகைகள் இல்லையா என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளன. தமன்னாவுக்கு வழங்கிய விளம்பர தூதர் பொறுப்பை கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள அல்லது முன்னணி நடிகையாக உள்ள யாருக்கேனும் வழங்கியிருக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கூறியிருக்கின்றன.

நடிகை தமன்னாவுக்கு எதிராக எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து கர்நாடக வணிகவரி மற்றும் தொழில்துறை அமைச்சர் எம் பி பாட்டில் எதிர்ப்பு குரல் எழுப்பியவர்களை சாந்தப்படுத்தும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் எம்பி பாட்டில் கூறியிருப்பதாவது, கர்நாடகா சோப் மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம் கன்னட திரை உலகின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறது.

- Advertisement -

நம் கன்னட திரைப்படங்கள் பாலிவுட் படங்களுக்கே சவால் விடும் விதமாக உருவாகி வருகின்றன. மைசூர் சாண்டல் கர்நாடகா அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வலுவாக இருக்கிறது. அதே நேரத்தில் இதை கர்நாடகாவையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் கொண்டு சேர்த்து வலுப்படுத்தும் விதமாகத்தான் நடிகை தமன்னா விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது வியாபார துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவின் மூலமாக தீர்மானிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவே தவிர தன்னிச்சையான முடிவு அல்ல. கர்நாடகாவின் பெருமை என்பது இந்த நாட்டின் ஒரு ஆபரணம் போன்றது என்று எம்பி பாட்டில் அந்த பதிவில் கூறியிருக்கிறார். தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழி சார்ந்த சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நடிகையாக தமன்னா இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்