“தளபதி 68” திரைப்படத்தை குறித்த பேச்சுக்கள்தான் சமூக வலைத்தளங்கள் முழுவதையும் சமீப நாட்களாக ஆக்கிரமித்து வருகிறது. “லியோ” திரைப்படத்திற்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கான எதிர்பார்ப்பு “தளபதி 68” திரைப்படத்திற்கும் இருக்கிறது.
“தளபதி 68” திரைப்படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. தந்தை விஜய்க்கு ஜோடியாக முதலில் ஜோதிகா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சினேகா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
மேலும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போல் இதில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கப் போகிறார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வேறு விதமான ஒரு தகவல் வருகிறது.
அதாவது இத்திரைப்படத்தில் ஜெய் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என தகவல் வருகிறது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்த மாஸ் ஆன ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் இரண்டு மிகப் பெரிய நடிகர்கள் இணைந்துள்ளார்களாம். ஒருவர் பிரபு தேவா, மற்றொருவர் பிரஷாந்த். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.
பிரபு தேவா இதற்கு முன்பு விஜய்யை வைத்து “போக்கிரி”, “வில்லு” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். பிரஷாந்த் நடித்துள்ள “அந்தகன்” திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அத்திரைப்படத்தின் வெளியீடு குறித்தான எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பிரபு தேவாவும் பிரஷாந்தும் “தளபதி 68” திரைப்படத்தில் இணைந்துள்ளதாக ஒரு மாஸ் ஆன தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





