- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர்... தயாரிப்பில் இறங்கும் முன்னணி நிறுவனம்...

ரஜினிகாந்த் மகள் இயக்கத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர்… தயாரிப்பில் இறங்கும் முன்னணி நிறுவனம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடன கலைஞராக உள்ளே வந்தவர் ராகவா லாரன்ஸ். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி அவர், டான்ஸ் மாஸ்டராக வலம் வந்தார். பிறகு சினிமாக்களில், சில பாடல்களுக்கு அவர் நடனமாடி வந்தார். அமர்க்களம் திரைப்படத்தில் மகா கணபதி பாடலுக்கு அவர் நடனமாடி இருப்பார். இப்படி திரைக்கு முன்பு தோன்றிய ராகவா லாரன்ஸிற்கு, ஹீரோவாக வாய்ப்பும் கிடைத்தது.

ஆனால் ஆரம்பத்தில் அவர் கதாநாயகனாக ஏற்று நடித்த எந்த திரைப்படமும் பெரிய அளவில் ஓடவில்லை. அற்புதம், பார்த்தாலே பரவசம் என அவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போயின. இதை தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ். முதலில் தெலுங்கு பட உலகில் நாகர்ஜுனாவை வைத்து படம் இயக்கிய அவர், தமிழில் முனி திரைப்படம் மூலம் இயக்குனரானார்.

- Advertisement -

இதன் பிறகு அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பேய் பங்களா, அதிலேயே தீரா பகையுடன் காத்திருக்கும் பேய், அமானுஷ்யத்தை கண்டால் பயப்படும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் பேய்க்கு உதவும் ஹீரோ என அடித்து துவைத்த டெம்ப்ளேட் இந்த திரைப்படத்தின் உபயோகிக்கப்பட்டிருந்தாலும், அதனைக் காட்சிப்படுத்திய விதத்தில் கை தேர்ந்தவராக ஜொலித்தார் ராகவா லாரன்ஸ்.

அதிலும் ஹாரர் படத்தில் நகைச்சுவையை புகுத்திய அவரது புதுமை, பலருக்கும் பிடித்துப் போனது. இதனைத் தொடர்ந்து காஞ்சனா பட சீரிஸ்களை எடுத்து தள்ள ஆரம்பித்தார் ராகவா லாரன்ஸ். இதில் இரண்டாம் பாகம் ஹிட்டடிக்க மூன்றாம் பாகம் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. தொடர்ந்து ஒரே விதமான காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் கூறிய நிலையில், காஞ்சனாவிலிருந்து ஜகா வாங்கினார் ராகவா லாரன்ஸ்.

- Advertisement -

இப்படியான சூழலில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. படத்தில் எஸ் ஜே சூர்யா இருந்தாலும், ராகவா லாரன்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரமாதமாக இருப்பதாகவும், அவர் நன்றாக நடித்திருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் பாராட்டைப் பெற்றார் ராகவா லாரன்ஸ்.

இப்படியான சூழலில் அவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சௌந்தர்யா, கோச்சடையான் மற்றும் விஐபி படத்தில் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் இயக்கும் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் திரைப்படம் குறித்த விரிவான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்