- Advertisement -
Homeபொழுதுபோக்குவழக்கமான மிரட்டல் காட்சிகள் இதில் இருக்காது… ஆனா வேற மாதிரி இருக்கும் - காஞ்சனா 4...

வழக்கமான மிரட்டல் காட்சிகள் இதில் இருக்காது… ஆனா வேற மாதிரி இருக்கும் – காஞ்சனா 4 குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

ஆரம்பத்தில் நடன கலைஞராக இருந்து பிறகு டான்ஸ் மாஸ்டராக மாறியவர் ராகவா லாரன்ஸ். அதன்பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அமர்க்களம் படத்தில் பாடல் ஒன்றில் நடன காட்சியில் தோன்றிய அவர் அடுத்து அற்புதம் ஸ்டைல் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் முனி படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுத் தந்தது.

அந்த படத்தில் ராஜ்கிரண் ஆவி ராகவா லாரன்ஸ் உடம்புக்குள் புகுந்துக்கொள்ளும். பிறகு வில்லன்களை ராகவா லாரன்ஸ் பழிவாங்குவதுதான் கதை. இந்த படத்துக்கு கிடைத்த அபார வெற்றிக்கு பிறகு காஞ்சனா என்ற படத்தை இயக்கினார் ராகவா லாரன்ஸ். அந்த படமும் மாஸ் ஹிட் ஆனது.

தொடர்ந்து மற்ற படங்களில் நடித்தாலும் அவ்வப்போது காஞ்சனா சீரிஸ் படங்களை இடையிடையே ராகவா லாரன்ஸ் ரசிகர்களுக்கு தந்து வருகிறார். அந்த வரிசையில் காஞ்சனா 2 காஞ்சனா 3 படங்களை தொடர்ந்து அடுத்ததாக காஞ்சனா 4 படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே பேய் கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை பொள்ளாச்சி ஐதரபாத் என தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்ததாக மும்பையில் ஷூட்டிங் ஷெட்யூல் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பென்ஸ் படத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அதனால் சில வாரங்கள் காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்புக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சனா 4 படம் குறித்த ஒரு முக்கிய தகவலை மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இப்போது கூறியிருக்கிறார் . இதுவரை வெளியான காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா படங்களின் சாயல் இல்லாத வகையில் புதுமாதிரியான ஹாரர் கதையில் புதுமையாக இந்த படத்தை அவர் உருவாக்கி வருவதாக கூறியிருக்கிறார்.

மேலும் ராகவா லாரன்ஸ் கூறுகையில், என் முந்தைய படங்களில் மனித ஆவிகளை தான் ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் காஞ்சனா 4 படத்தில் டிஜிட்டல் ஆவிகளை பார்க்க உள்ளனர். அந்த வகையில் வழக்கத்துக்கு மாறாக இந்த படம் புதுமையான முறையில் படம் பார்க்கும் ரசிகர்களை மிரட்டப் போகிறது என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

சற்று முன்