நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்த நாளை வருகிற 12ம் தேதி கொண்டாட இருக்கிறார். இது அவரது 75வது பிறந்த நாளாகும். தமிழ் சினிமாவில் ரஜினி பயணிக்க ஆரம்பித்தது இந்த ஆண்டில் 50 ஆண்டு பொன்விழாவை நிறைவு செய்திருக்கிறார். அந்த வகையில் இந்த பிறந்த நாள் அவருக்கு மிகவும் ஸ்பெஷலாக அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1999ம் ஆண்டில் நடித்து வெளியான படம் படையப்பா. இந்த படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் லட்சுமி மணிவண்ணன் நாசர் ரம்யாகிருஷ்ணன் சௌந்தர்யா ரமேஷ் கண்ணா செந்தில் ராதாரவி அப்பாஸ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ஏஆர் ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. குறிப்பாக நீலாம்பரி கேரக்டரில் வில்லியாக நடித்த ரம்யாகிருஷ்ணனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டும் வாழ்த்துகளும் கிடைத்தது,
ஆனால் இந்த படத்தில் முதலில் நீலாம்பரி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்பியது நடிகை ஐஸ்வர்யா ராயை தான். ஆனால் அவர் சம்மதிக்காத நிலையில் நீலாம்பரியாக நடிக்க ரம்யாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அமைந்தது. மன்னன் படத்தில் ரஜினிக்கு எதிராக விஜயசாந்தி நடித்த நிலையில், அதுபோன்ற ஒரு கேரக்டரில் இதில் ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா படத்தை என் நண்பர்கள் மூலமாக நான்தான் சொந்தமாக தயாரித்தேன். அந்த படத்தோட மூலக்கதை என்னுடையதுதான். பொன்னியின் செல்வன் நாவலை விரும்பி படித்தேன். இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல்.
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி நான் நினைத்த படம்தான் படையப்பா. அந்தப் படத்தின் டைட்டிலை கூட நான்தான் வெச்சேன். அண்ணாமலை பாட்ஷா வீரா முத்து படங்களுக்கும் நான்தான் டைட்டில் வைத்தேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





