- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரவு 2.30 மணிக்கு கமலை இப்போதே பார்க்க வேண்டும் என அடம்பிடித்த நடிகர் ரஜினிகாந்த் -...

இரவு 2.30 மணிக்கு கமலை இப்போதே பார்க்க வேண்டும் என அடம்பிடித்த நடிகர் ரஜினிகாந்த் – தூங்கிக் கொண்டிருந்த கமலை எழுப்பி ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களது இறுக்கமான நட்பு இன்று வரை தொடர்கிறது. ஆரம்பத்தில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தனர். அந்த படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் கலந்து பேசி இனி ஒன்றாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

அதன்பிறகு ரஜினி ஒரு திசையிலும் கமல் ஒரு திசையிலும் பயணித்தனர். இப்போது இருவருமே இந்திய அளவில் போற்றப்படும் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருந்து வருகின்றனர். ஒரு படத்தில் நடிக்க 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகின்றனர். இப்போதும் கமல்ஹாசன், தனது குருநாதர் கே பாலசந்தருக்கு அடுத்தபடியாக மதிக்கும் ஒரு முக்கிய நபராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அப்போது பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது, ராஜ்கமல் பிலிம்ஸ் பல படங்களை சொந்தமாக எடுத்தார்கள். அதில் எனக்கு ரொம்ப பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். அந்த படம் ரிலீஸ் ஆனபோது வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தேன்.

அந்த படம் வெளியாகி வந்த பிறகு, இரவு 11 மணிக்கு மேனா தியேட்டரில் எனக்காக அந்த படத்தை திரையிட்டார்கள். படம் பார்த்து முடிக்கும்போது இரவு 2 மணி ஆகிவிட்டது. அப்போது நான் என் மனைவியிடம் இப்போதே கமல்ஹாசனை நான் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். இப்போவா, அவங்க தூங்கிட்டு இருப்பாங்களே என்று அவர் சொன்னார்.

- Advertisement -

இல்ல இல்ல நான் அவரை இப்பவே பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டு, 2.30 மணிக்கு அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினேன். தூங்கிக் கொண்டு இருந்த கமலை எழுப்பி கை கொடுத்து, வயதில் என்னைவிட நீங்கள் சின்னவர். இல்லேன்னா உங்கள் கால்களில் நான் விழுந்துடுவேன்.

நீங்க ஒரு இம்மார்டல். அப்போ இருக்கிற இந்த அளவுக்கு அப்போ எல்லாம் டெக்னாலஜி இல்லை. அந்த டைமில், அந்த குள்ளமான கேரக்டரில் கமல் நடித்தபோது எடுத்த சிரமங்கள் எதுவும் சாதாரணமாக இருந்திருக்காது என்று அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் குறித்து பெருமையாக கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்