தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாக படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். கூலி படத்தைத் தொடர்ந்து இப்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுதினம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்தை பொருத்தவரை தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு உச்ச நட்சத்திரமாக ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான் சிங்கப்பூர் மலேசியா துபாய் அமெரிக்கா என வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் நிறைய உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 74 வயதிலும் இன்னும் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பது அவர்களில் ஒரு தரப்பு ரசிகர்களுக்கு அவரது உடல் நலம் குறித்த அக்கறையை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து இப்படியே ஓய்வு இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்வது, அவரது உடல் நலத்தை பாதிக்குமோ என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ரஜினிகாந்த் வழுக்கி விழுவது போன்ற ஒரு காட்சி காணப்படுகிறது.
தலையில் நரைத்த முடி அரைக்கால் சட்டை மற்றும் அரைக்கை பனியன் அணிந்த நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் நடந்து செல்லும் போது அங்கிருக்கும் ஈரம் காரணமாக, திடீரென கீழே வழுக்கி விழுகிறார் பின்னர் அவரே எழுந்து மீண்டும் நடக்க தொடங்குகிறார். அவரை பார்ப்பதற்கு ரஜினிகாந்த் போன்ற தோற்றத்தில் இருப்பதால் வீடியோவில் உள்ளவர் ரஜினிகாந்த் தான் என்று ரசிகர்கள் நம்பிவிட்டனர். இதனால் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த ரஜினி ரசிகர்கள், கவனமாக இருங்கள் தலைவா பதிவுகளை செய்ய தொடங்கி விட்டனர்
ஆனால் அந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் அல்ல, வேறு நபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடியோவில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரியாததால் ஏற்பட்ட குழப்பம் இது என்றும், இப்போது ரஜினிகாந்த் மிகவும் நலமாக இருப்பதாகவும் படக்குழு சார்பிலும் ரஜினிகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, அப்படி வழுக்கி விழுந்தவர் ரஜினிகாந்தும் இல்லை என்று ரசிகர்களுக்கு உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிலர் தவறுதலாக அது ரஜினிதான் என்று அந்த வீடியோவை இணையத்தில் பரவ விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.





