- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுள் தந்த பரிசு படத்தின் பாடல்களை ஒரே நாளில் போட்டுத்த இசைஞானி - இசை கடவுளுக்கு...

கடவுள் தந்த பரிசு படத்தின் பாடல்களை ஒரே நாளில் போட்டுத்த இசைஞானி – இசை கடவுளுக்கு என்று பதிவிட்ட நன்றியை வெளிப்படுத்திய நடிகர் ராமராஜன்!

- Advertisement -

மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் கடவுள் தந்த பரிசு என்ற படத்தில் நடிக்கிறார் இந்த படத்தை அறிமுக இயக்குனர் காசிமாயன் டைரக்ட் செய்கிறார். இது இளையராஜா இசையில் உருவாகும் ராமராஜனின் 25வது படம். 83 வயதிலும் ஒரே நாளில் ஒரு படத்திற்கான அனைத்து பாடல்களையும் அவர் இசையமைத்த தந்தது வியப்பை தந்துள்ளது. இதுகுறித்து நடிகர் ராமராஜன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, எனது கடவுள் தந்த பரிசு படத்திற்கு ஒரே நாளில் 6 பாடல்களை கம்போஸ் செய்தும் அடுத்த சில நாட்களிலேயே ரெக்கார்டிங் முடித்து சிறந்த பாடல்களை தந்திருக்கும் என் அண்ணன் இசை கடவுளுக்கு என் நெஞ்சம் மகிழ்ந்த நன்றி. அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவன் நான் என்று நடிகர் ராமராஜன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். மேலும் இளையராஜாவுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படத்தையும் அந்த பதிவில் நடிகர் ராமராஜன் இணைத்திருக்கிறார்.

சற்று முன்