- Advertisement -
முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் நேற்று தனது 53வது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியிருக்கிறார். நடிகை ஐஸ்வர்யா ராய் கூறுகையில், ரசிகர்களின் அன்பால் ஒவ்வொரு நாளும் பூரித்துப் போகிறேன். அந்த அன்பு தான் எனக்கு எப்போதும் பிரகாசத்தை கொடுக்கிறது. வாழ்க்கையில் இக்கட்டான தருணங்களை கடந்து வருவதற்கும் ரசிகர்கள் காட்டும் அன்பும் பாசமும் தான் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தன. இத்தகைய அன்பை பெறுவதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் மீது அன்பு செலுத்தும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஐஸ்வர்யா ராய் கூறியிருக்கிறார்.





