- Advertisement -
Homeபொழுதுபோக்குநல்லவேளை, அந்த டைரக்டர் படத்துல நடிக்க விடாமல் கடவுள் என்னை காப்பாத்திட்டார் - போட்டுத்தாக்கிய நடிகர்...

நல்லவேளை, அந்த டைரக்டர் படத்துல நடிக்க விடாமல் கடவுள் என்னை காப்பாத்திட்டார் – போட்டுத்தாக்கிய நடிகர் ராமராஜன்

- Advertisement -

நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் முன்னணி நாயகர்களில் ஒருவர். ரஜினி, கமல் படங்களை போலவே அந்த காலகட்டத்தில் பி மற்றும் சி சென்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திருவிழா போன்ற திரண்டது ராமராஜன் நடித்த படங்களுக்குதான். இப்போதும் ராமராஜன் நடித்த படங்களை ரசிக்க முடியும்.

கிராமத்து கதைகளில் நடித்து நடித்து மக்கள் மனம் கவர்ந்த கிராமத்து நாயகன் ராமராஜன். இளையராஜா இசையில், அவரது படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்தான். இப்போதும் அந்த பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்களாக இருக்கின்றன. ராமராஜன் படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு இளையராஜாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

ராமராஜன் நடித்த படங்களில் கரகாட்டக்காரன் அவரது புகழை உச்சிக்கு கொண்டு சென்ற படம். ஏறக்குறைய இது தில்லானா மோகனாம்பாள் கதைதான். அதில் சில உல்டா இடைச்செருகல்களை செய்து, இயக்குனர் கங்கை அமரன் ஜோடனை செய்திருப்பார். கவுண்டமணி, செந்தில் காமெடி படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ராமராஜன், அவரது படங்களில் எம்ஜிஆர் பட போஸ்டர்களை, எம்ஜிஆர் நடித்த காட்சிகளை இடம்பெறச் செய்து, தன் அன்பை வெளிப்படுத்துவார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா அபிமானம் பெற்ற ராமராஜன், அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார். ஒரு விபத்தில் சிக்கிய பிறகு, ராமராஜன் நடிப்பதை விட்டு ஒதுங்கி இருந்த நிலையில், இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சாமானியன் என்ற அவரது படம் விரைவில் வெளியாகிறது.

- Advertisement -

எம்ஜிஆரை போலவே, ராமராஜனும் தான் நடிக்கும் படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் இதுவரை நடித்தது இல்லை. அவர் நடிக்கும் படங்களில் அதை கட்டாயமாக தவிர்ப்பார். ஒரு ஹீரோ மக்களுக்கு நல்லது செய்து, நல்வழி காட்டுபவனாக இருக்க வேண்டும். கெட்டவனாக நடித்து தவறான பாதையை காட்டுபவனாக இருக்கக் கூடாது என்றும் ராமராஜன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

நடிகர் ஆர்ஜே பாலாஜி அவரது படத்தில் நடிக்க அழைத்தார். இலங்கையில் ஷூட்டிங் என்றதால் நான் போகவில்லை. இயக்குனர் வெங்கட்பிரபு, பார்ட்டி என்ற படத்தில் என்னை நடிப்பதற்கு அழைத்தார். நான் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன். சில நாட்களுக்கு பிறகு பார்ட்டி போஸ்டர் மதுபாட்டில்களுடன் வந்தது. அப்பாடா, இந்த படத்தில் நடிக்காமல் கடவுள் என்னை காப்பாத்திட்டார், என்று நினைத்துக்கொண்டேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகர் ராமராஜன்.

- Advertisement -

சற்று முன்