- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போதே விஜயை குறிவைக்கும் பிரதான அரசியல் கட்சிகள், வாய் திறக்க முடியாத திமுக - விஜய்...

இப்போதே விஜயை குறிவைக்கும் பிரதான அரசியல் கட்சிகள், வாய் திறக்க முடியாத திமுக – விஜய் வெளியிட்ட பட்டியலை கவனிச்சீங்களா?

- Advertisement -

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்த நண்பரும் இல்லை என்று சொல்லப்படுவது உண்டு. அதற்கு காரணம், அரசியல் கட்சிகளுக்கு பதவியும், தேர்தல் வெற்றியும்தான் முக்கியமே தவிர, யாருடன் கூட்டணி, யாருடன் போட்டி என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தேர்தலை பொருத்த வரை வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் பிரதானமே தவிர, கட்சிக் கொள்கை எல்லாம் பதவிக்கு பிறகுதான் என்பதுதான் நிலை.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள், அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மாறிவிடும். ஒருமுறை பாஜக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், அடுத்த முறை காங்கிரஸ கட்சிக்கு மாறிவிடலாம். இப்படி தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி கட்சிகள் அணிமாறும், காட்சிகள் மாறுவதை தொடர்ந்து வாக்காள பெருங்குடி மக்கள் பார்த்துக்கொண்டுதான் வருகின்றனர்.

- Advertisement -

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளே மாறி மாறி, ஆட்சி செய்துவரும் நிலையில், மக்கள் அலுத்த சலித்து போய்விட்டனர். இரண்டு கட்சிகளும் மாறி மாறி, தங்களது கட்சி வளத்தை, கட்சியினர் வளத்தை பெருக்கிக் கொள்கிறதே தவிர, மக்களுக்கு இந்த ஆட்சியாளர்களால் எந்த நன்மையும் இல்லை. எம்ஜிஆருடன் பொற்கால ஆட்சி என்பது போய்விட்டது என்றுதான் தமிழக மக்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசியலில் புது ரத்தம் பாய்ச்சும் விதமாக, விஜய் கட்சி துவங்கியிருப்பதும், 2026 சட்டசபை தேர்தலில் போட்டி என்ற அவரது நிலைப்பாடும், தமிழக மக்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி தந்த மக்கள், தமிழகத்தில் பாஜக வேண்டவே வேண்டாம் என்ற உறுதிபாட்டில் தங்களது ஓட்டுகளை திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தந்தார்களே தவிர, திமுக வேண்டும் என்று பொதுஜனம் வாக்களிக்கவில்லை, என்ற கசப்பான உண்மை ஸ்டாலினுக்கும் தெரியும்.

- Advertisement -

நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, ஓ பன்னீர் செல்வம், ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பாஜக தரப்பில் அண்ணாமலை,தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், நாம் தமிழர் கட்சி சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன், பாமக தலைவர் ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தரப்பில் செல்வப் பெருந்தகை, விஜய் வசந்த் என முக்கிய கட்சியினர் வாழ்த்துகளை கூறியிருக்கின்றனர்.

ஆனால், அரசியல் நாகரிகம் கருதிக் கூட திமுக தலைவர் ஸ்டாலின், தவெக கட்சியின் தலைவர் என்ற முறையில், விஜய்க்கு வாழ்த்து கூறியிருக்கலாம். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், சக நடிகர் என்ற முறையில் வாழ்த்து கூறியிருக்கலாம். ஆனால் கவனமாக தவிர்த்து விட்டனர். அதே வேளையில் 2026 தேர்தலில் விஜய் செல்வாக்கு உயரும் பட்சத்தில், அவருடன் இணைய பாஜக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதிமய்யம் தாராளமாக முன்வரலாம். அதற்காக தான் இப்போதே விஜய்க்கு குறிவைத்து பல கட்சியினர் வாழ்த்துகளை சொல்லி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்