- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலில் வரும் போது எல்லாத்தையும் நடிகர் விஜயால் சமாளிக்க முடியுமா? நடிகர் ராமராஜன் கேள்வி!

அரசியலில் வரும் போது எல்லாத்தையும் நடிகர் விஜயால் சமாளிக்க முடியுமா? நடிகர் ராமராஜன் கேள்வி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் பல வெற்றிப் படங்களை தந்தவர் ராமராஜன். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அவர் பிறகு நடிகராக மாறினார். அப்போது முன்னணி நடிகையாக இருந்த நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நடிகர் ராமராஜன் ரஜினி கமல் படங்களுக்கு இணையாக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். வசூல் மன்னனாக இருந்தார். கிராமப்புறங்களில் ராமராஜன் படங்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியது. மக்கள் நாயகன் என்ற சிறப்பு பெயரும் ராமராஜனுக்கு கிடைத்தது.

- Advertisement -

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா படங்களாக இருந்தன. குறிப்பாக கவுண்டமணி செந்தில் காமெடி இளையராஜா இசை கிராமத்து கதை என ராமராஜன் படங்கள் எல்லாமே இன்றும் ரசித்து பார்க்கும் நல்ல பொழுதுபோக்கு படங்களாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா வரலாற்றில் ராமராஜன் கனகா நடித்த கரகாட்டக்காரன் படம் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது. மேலும் அதிமுக விசுவாசியான ராமராஜன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டதர். ஒருமுறை அதிமுக ராஜ்யசபா எம்பியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராமராஜன் கூறியதாவது, விஜய் தம்பி சின்ன வயசுல இருந்து எனக்கு நல்ல பழக்கம். என்னோட வீட்டுக்கு பின்னாடி தான் விஜய் தம்பி வீடு இருக்குது. எப்ப பார்த்தாலும் பாட்டு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். நடிப்பில் விஜய் தம்பி உச்சத்துக்கு போயிட்டார். மிகப்பெரிய ஹீரோ ஆயிட்டார்.

அதுக்கு காரணம் அவருடைய உண்மையான உழைப்பு. எனக்கு ரொம்ப சந்தோசம் தான். ஆனால் அரசியல் என்று வரும்போது நிறைய கஷ்டங்கள் தொல்லைகள் வரும். அதை சமாளிச்சு மேல போகணும். அதை சமாளிச்சிட்டால் எந்த கவலையும் இல்லை; அவர் ஜெயித்து வந்து விடுவார் என்று நடிகர் ராமராஜன் அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்