இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்த படம் பாகுபலி. பான் இந்தியா படமாக 2 பாகங்களாக வெளியான இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இந்திய சினிமா ரசிகர்களால் பாகுபலி படம் கொண்டாடப்பட்டது. பாகுபலி 2 பாகங்களாக வெளியாகி மாஸ் ஹிட் ஆன பிறகுதான் பலரும் படங்களை 2 பாகங்களாக தயாரிக்கவும் இயக்கவும் துணிச்சலாக முன்வந்தனர்.
பாகுபலி படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் அப்பா மகன் கேரக்டரில் நடித்திருந்தார். அனுஷ்கா தமன்னா ரம்யாகிருஷ்ணன் நாசர் ரோகிணி சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. எனினும் பாகுபலி படத்தில் பல்வான் தேவன் கேரக்டரில் நடித்த நடிகர் ராணா டகுபதி அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தார் என்றால் அது மிகையல்ல.
இந்திய சினிமா ரசிகர்களால் பாகுபலியில் வில்லனாக நடித்த பல்வான் தேவனை எப்போதும் மறக்கவே முடியாது. 6.2 அடி உயரத்தில் 120 கிலோ எடையில் அவரது ஆஜானுபாகுவான தோற்றமும் கம்பீரமான நடிப்பும் வில்லனாக அவரது கொடுமைகளும் அந்த படத்தை பன்மடங்கு விறுவிறுப்பாக்கி மாபெரும் வெற்றிப் படமாக மாற்றியது.
ஆனால் அப்படி ஒரு மாஸ் ஆன தோற்றத்தில் நடித்திருந்த நடிகர் ராணா டகுபதி அதன்பிறகு வேட்டையன் படத்தில் கார்பரேட் வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு ராணா டகுபதியை பெரும்பாலும் படங்களில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தற்போது உடல் மெலிந்து போய் தளர்ந்த நிலையில் மிகவும் பலவீனமாக தோற்றத்தில் அவர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுகுறித்து நடிகர் ராணா டகுபதி கூறியிருப்பதாவது, பாகுபலி 2 படம் ரிலீஸ்க்கு பிறகு எனக்கு கிட்னி பெயிலியர் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றதால் ஏற்கனவே கமிட்டான படங்களிலிருந்து வெளியேறி அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்ட அந்த நேரத்தில் இமேஜ் ஸ்டார் அந்தஸ்து குறித்து எல்லாம் எனது கவனம் இருக்கவில்லை.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் நான் இருந்தேன் என்று ஒரு நேர்காணலில் நடிகர் ராணா டகுபதி வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் ஒரு ஆண்டு காலம் அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் வேறொரு நபராக அடையாளம் மாறி ஒல்லியான தோற்றத்தில் இந்தியாவுக்கு அவர் திரும்பி வந்திருக்கிறார். தனது தோற்றம் மோசமாக மாறிவிட்டதால் கமிட் ஆன படங்களில் நடிக்க முடியவில்லை என்றும் ராணா டகுபதி வருத்தமாக கூறியிருக்கிறார்.





