- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மோகன் ரவி திடீரென தயாரிப்பாளராக மாறியது இதற்காக தான் - விட்ட இடத்தை பிடிக்க...

நடிகர் மோகன் ரவி திடீரென தயாரிப்பாளராக மாறியது இதற்காக தான் – விட்ட இடத்தை பிடிக்க அவர் களத்தில் இறக்கப் போவது யாரை தெரியுமா?

- Advertisement -

சினிமாத் துறையில் காலடி பதித்து ஜெயம் என்ற படத்தில் அறிமுகமாகி அந்த படம் பெரிய ஹிட் ஆனதில் இருந்தே ஜெயம் ரவி என்றுதான் நடிகர் ஜெயம் ரவி அழைக்கப்படுகிறார். ஜெயம் ரவியாக நடித்துதான் அவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் இப்போது ஜெயம் ரவி இல்லை, இனி என் பெயர் ரவி மோகன் என்று மாற்றியும் அறிவித்து விட்டார்.

ஆனால் ரவி மோகன் என்றால் அது ஜெயம் ரவி முகத்தை ஞாபகப்படுத்தவில்லை. ஜெயம் ரவி என்றால்தான் தனி ஒருவன், பொன்னியின் செல்வன் ஜெயம் படத்தில் நடித்த ரவிமோகன் நினைவுக்கு வருகிறார் என்பதுதான் ரசிகர்கள் சொல்லும் கசப்பான உண்மை. எனினும் இனி ரவிமோகன் என அழைப்பது தவிர்க்க முடியாதது.

- Advertisement -

இந்த சூழலில் ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. வித்யாசமான காதல் கதைக்களம் என்று பலரும் விரும்பி படத்தை பார்க்கின்றனர். கிருத்திகா உதயநிதி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஏற்கனவே வணக்கம் சென்னை காளி ஆகிய படங்களை கிருத்திகா டைரக்ட் செய்திருக்கிறார்.

இந்த சூழலில் சமீபத்தில் தனது பெயர் மாற்றம் குறித்து அறிக்கை வெளியிட்ட முந்தைய ஜெயம் ரவியான, ரவி மோகன் இப்போது ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி இருக்கிறார். இவரது அண்ணன் ராஜா மோகன் இயக்குனராக ஜெயம் தனி ஒருவன், போகன் படங்களை இயக்கினார். அடுத்து தனி ஒருவன் 2 பாகம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

- Advertisement -

இதில் டிக் டிக் டிக் என்ற படத்தில் ரவி மோகனுடன் அவரது மகன் ஆரவ் ரவியும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த படம் 2018ம் ஆண்டில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. குறும்பா என் உலகே நீதாண்டா என்ற பாடல் டிரண்டிங் ஆனது. இப்போது ஆரவ் ரவியும் சினிமாவில் நாயகனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரவி மோகன் கூறியதாவது, நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் இயக்குனராகி இருப்பேன். நானும் என் மகனும் நடிக்கும் ஒரு கதையை என் அப்பா ரெடி செய்து வைத்திருக்கிறார். நான் இயக்கும் படத்தில் நானும் என் மகனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் உள்ளது என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால் தனது மகன் நடிக்கும் படத்தை இயக்கும் ரவி மோகன், தனது தயாரிப்பிலேயே அதை உருவாக்க தான் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமே துவங்கியிருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்