- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வி… இதுதான் நமக்கு சரியான ரூட்… அதிரடி முடிவுக்கு மாறிய...

ஹீரோவாக நடித்த படங்கள் தொடர் தோல்வி… இதுதான் நமக்கு சரியான ரூட்… அதிரடி முடிவுக்கு மாறிய நடிகர் ரவி மோகன்!

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை இந்த கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என்று எந்த கலைஞரும் அடம்பிடிக்க கூடாது. நடிப்பது தொழில். அது எந்த வேஷமாக இருந்தாலும் அதில் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பிருந்தால் நடித்து காட்டி ரசிகர்களை அசத்த வேண்டும் என்று மூத்த சினிமா கலைஞர்கள் சிலர் கூறியதுண்டு. இது அனுபவம் பேசும் உண்மையாக தான் இருக்கிறது.

ஏனென்றால் ஆரம்பத்தில் படத்தில் நாயகனாக நடித்த பல நடிகர்கள் இன்று வில்லன்களாக நடிக்கின்றனர். இன்னும் சிலர் ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்கின்றனர். அதுவும் இல்லை என்றால் டாக்டர் போலீஸ் அதிகாரி அரசு அதிகாரி விஞ்ஞானி கல்லூரி பேராசிரியர் என ஏதேனும் ஒரு கேரக்டரில் தங்களது முதுமையான தோற்றத்துக்கு ஏற்ப ஒரு ரோலில் நடித்து நடிப்பை தொடர்கின்றனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பிழந்த பல நடிகர் நடிகைகள் 50 வயதுகளை கடந்த நிலையில் டிவி சீரியல்களில் தஞ்சமடைகின்றனர். ஒரு சீரியல் முடியவே 4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை நீடிப்பதால் நான்கைந்து சீரியல்களில் கமிட் ஆகி விட்டாலே போதும். அவர்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து கேமரா முன்பு நின்று விடலாம். வருமானத்துக்கும் குறைவு இருக்காது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ரவி மோகன். ஜெயம் படத்தில் அவர் அறிமுகமானார். ஜெயம் ரவி என அழைக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டில் தனது பெயரை நடிகர் ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ரவிமோகன் மாறியிருக்கிறார். நடிகர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தையும் அவர் இயக்க உள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரவிமோகன் நடித்த பல படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. குறிப்பாக அகிலன் இறைவன் சைரன் 108 காதலிக்க நேரமில்லை பிரதர் என அவரது படங்கள் தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் வில்லன் கேரக்டரில் நடிக்க முன்வந்தார். பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க ரவிமோகன் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

இப்போது மீண்டும் அவர் வில்லன் கேரக்டரில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் பென்ஸ் படத்தில் வில்லனாக நடிகர் ரவிமோகன் நடிப்பது உறுதியாகி உள்ளது. ஹீரோவாக நடித்து பல படங்கள் தோல்வி கண்டதால் அவர் வில்லன் கேரக்டரில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் இதற்கு பெரிய சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்