இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பராசக்தி. இந்த படத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் என்றாலும் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் ரவி மோகன் தான் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றார். அவரது வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத் தொடர்ந்து நடிகர் ரவிமோகன் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். தெலுங்கு நடிகர் நானி நடிப்பதாக இருந்த ஒரு கதையில் நானிக்கு பதிலாக நடிகர் ரவி மோகன் நடிப்பது உறுதியாகி விட்டது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
இதற்கிடையே நடிகர் ரவிமோகன் நடித்த ஜீனி மற்றும் கராத்தே பாபு ஆகிய படங்கள் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டன. இதில் கராத்தே பாபு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் ரவி மோகன் அரசியல்வாதியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கராத்தே பாபு படத்தின் ஷூட்டிங் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. நடிகர் ரவி மோகன் நடிக்க வேண்டிய 18 நாட்கள் காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க் காட்சிகள் என மொத்தம் அவர் 20 நாட்கள் இந்த படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கி தர வேண்டும். ஆனால் நான்கைந்து மாதங்களாக கால்ஷீட் தேதி ஒதுக்கித் தராமல் படப்பிடிப்பு வராமல் ஏதேனும் காரணம் சொல்லி நடிகர் ரவிமோகன் படக்குழுவினரை ஏமாற்றி வருகிறார்.
இந்த பிரச்னைக்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக தமிழக முன்னாள் போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கும் நடிகர் ரவிமோகனின் நெருங்கிய தோழி கெனிஷாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக நடிகர் ரவி மோகனுடன் அவரது தோழி பாடகி கெனிஷாவும் கூடவே வந்து விடுகிறார். கெனிஷா இல்லாமல் வெளியில் எங்கும் தனியாக செல்வதை ரவிமோகன் விரும்பாத நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் கெனிஷாவுடன் வந்து விடுகிறார். இப்போது கராத்தே பாபு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர் வந்தால் கெனிஷாவும் வருவார். படத்தின் நாயகி தவ்தி ஜிவால் கெனிஷா இருவருக்கும் ஆகாது என்பதால் அந்த படத்தில் நடிக்க 20 நாள் கால்ஷீட் தராமல் ரவி மோகனை, கெனிஷா தடுப்பதாக தகவல் பரவி வருகிறது.





