- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவிமோகன் கமிட் ஆன புதிய படம் - டைட்டிலே வேற லெவலா இருக்குதே? இதில்...

நடிகர் ரவிமோகன் கமிட் ஆன புதிய படம் – டைட்டிலே வேற லெவலா இருக்குதே? இதில் நாயகியாக நடிக்க போட்டி போடும் நடிகைகள் – அதுவும் அம்மா கேரக்டராமே?

- Advertisement -

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ரவிமோகன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குனர் ஷ்யாம் என்பவர் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த புதுமுக இயக்குனர் ஷ்யாம், இயக்குனர்கள் அட்லி விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் ஷ்யாம் உதவி இயக்குனராக பணி செய்திருக்கிறார். மேலும் நிறைய விளம்பர படங்களையும் அவர் இயக்கி உள்ளார். அவருடைய தந்தையும் ஒரு விளம்பர படம் மேக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ரவிமோகன் நடிக்கும் இந்த படம் ஒரு அதிரடி கதைக்களத்தில் உருவாகிறது.

கடந்த 2023ம் ஆண்டிலேயே இந்த படத்தை தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், ஷ்யாமை கமிட் செய்து விட்டது. இந்த படத்தில் நடிக்க முதல் விஜய் சேதுபதி, பிறகு விஷ்ணு விஷாலிடம் கதை சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்குமே இந்த கதை மிகவும் பிடித்த நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக இந்த படத்தில் அவர்களால் நடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்த கதையை கேட்ட நடிகர் ரவிமோகன், மற்ற படங்களின் கால்ஷீட் எல்லாம் தள்ளி வைத்துவிட்டு இந்த படத்தில் நடிக்க உடனே கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். வருகிற ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்தில் வரும் கதாநாயகி கேரக்டர் ஒரு குழந்தைக்கு அம்மா கேரக்டராக உள்ளது.

பொதுவாக கைக்குழந்தைக்கு அம்மா கேரக்டர் என்றாலே பல நடிகைகள் நடிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த படத்தில் அந்த அம்மா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் சிறப்பான கேரக்டர் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பெயர் வொயிட் என வெள்ளை என்ற பொருளில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது படத்தில் ரவிமோகன் அக்கவுண்டன்ட் கேரக்டரில் நடிப்பதால் கருப்பு வெள்ளை பணம் சார்ந்த கதைக்களமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால் வொயிட் என்ற தலைப்பு என்றும் கூறப்படுகிறது. படத்தின் இயக்குனர் ஷ்யாம், அனிருத்தின் பால்யகால நண்பர் என்பதால் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சற்று முன்