- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தி நடிகர் சல்மான்கானுக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா? அப்செட் ஆன பாலிவுட் ரசிகர்கள் -...

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா? அப்செட் ஆன பாலிவுட் ரசிகர்கள் – அவரே சொன்ன தகவல்தாங்க இது..!

- Advertisement -

இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவர் சல்மான்கான். 59 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக பாலிவுட்டில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். சில தீவிரவாத அமைப்புகளின் கொலை மிரட்டல் காரணமாக, கடும் பாதுகாப்பு அவருக்கு சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த படம் சிக்கந்தர். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். நடிகர் சத்யராஜூம் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் சிக்கந்தர் படம் எதிர்பார்த்த வெற்றியை வரவேற்பை பெறாமல் போய்விட்டது. மேலும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

இந்திய சினிமா நடிகர்களின் ஆணழகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சில நடிகர்களில் நடிகர் சல்மான்கானும் ஒருவர். 59 வயதான நிலையிலும் அவரது ஆஜானுபாகுவான கட்டுடல் தோற்றம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. இன்னும் பெண்கள் விரும்பும் ஒரு ஆணழகனாகவே அவர் காட்சி தருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபகாலமாக நடிகர் சல்மான்கான் சோர்வடைந்த நிலையில் காணப்படுகிறார். வழக்கமான அவரது சுறுசுறுப்பை உற்சாகத்தை அவரிடம் காண முடிவதில்லை. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. தனது உடல்நிலை குறித்து நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் சல்மான்கான் கூறியதாவது, டிரை ஜெமினல் நியூரால்ஜியா என்ற நோய் எனக்கு உள்ளது. அதனால் எனது மூளையில் ரத்த நாள வீக்கம் பிரச்னை இருக்கிறது. அது மட்டும் இன்றி ஏவி மால்பார்மேசன் என்ற பிரச்னையும் எனக்கு இருக்கிறது. இத்தனை இருந்தும் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறேன். எல்லாம் என் ரசிகர்களுக்காக… என்று நடிகர் சல்மான்கான் கூறியிருக்கிறார்.

நடிகர் சல்மான்கான் கூறிய டிரை ஜெமினல் நியூரால்ஜியா என்ற பிரச்னையால் முகத்தில் அடிக்கடி கூர்மையான வலி ஏற்படும் என்பதும், இந்த நோயை மருத்துவ உலகில் தற்கொலை நோய் என்றும் அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தில் நடிக்க நூற்றுக்கணக்கான கோடிகளில் சம்பளம் வாங்கும், இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர் சல்மான்கானுக்கு இப்படி ஒரு உடல்நல பாதிப்பா என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்