- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் இந்த டைரக்டர் கில்லாடியா இருக்கறாரே - ஷூட்டிங் ஸ்பாட்டில் அசந்துபோன பாலிவுட் நடிகர்

அந்த விஷயத்தில் இந்த டைரக்டர் கில்லாடியா இருக்கறாரே – ஷூட்டிங் ஸ்பாட்டில் அசந்துபோன பாலிவுட் நடிகர்

- Advertisement -

தமிழ் சினிமாவில், தொடர்ந்து அசத்தலான, பிரமாண்டமாக படங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்ப வசதி, ரசிகர்களை வியப்படைய செய்கிறது. இத்தகைய வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும் சினிமா இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் திரையில் ஜாலங்களை நிகழ்த்திக் காட்டி,ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றனர்.

கருப்பு வெள்ளை படங்கள், ஈஸ்ட்மென்ட் கலர் படங்கள், பிறகு சினிமாஸ்கோப் படங்கள் என தமிழ் சினிமா படிப்படியாக வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இப்போது, அந்த காலகட்டத்தில் வந்த படங்களை பார்க்கும்போது, அவை தெளிவாக திரையில் தெரியும். பல குளறுபடிகள் புரியும். அதுமட்டுமின்றி, அப்போதெல்லாம் ஒரு படத்தை எடுத்து முடிக்க பல மாதங்கள், ஆண்டுக்கணக்கில் கூட ஆகும்.

- Advertisement -

ஆனால், இன்றைய தமிழ் சினிமாவில் அப்படியல்ல. ஓரிரு மாதங்களில் படத்தை எடுத்து முடித்து விடுகின்றனர். 40 நாட்களில் முழு படப்பிடிப்பை முடித்து விடும் ஆற்றல் மிக்க இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கவே செய்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே, 24 மணி நேரத்துக்குள் சுயம்வரம் என்ற படம் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைத்தது. இதில் பல முன்னணி நடிகர், நடிகையர் நடித்திருக்க, 10க்கும் மேற்பட்ட இயக்குநர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது.

ஆனாலும், இன்னும் ஒரு விஷயத்தில் பல இயக்குநர்கள் செய்யும் முக்கிய தவறு, படப்பிடிப்பு தளத்தில் தேவையற்ற நிறைய காட்சிகளை ஷூட் செய்துவிட்டு, அவற்றை எடிட்டிங்கில் வெட்டி எறிவதுதான். ஒரே காட்சியை மீண்டும் மீண்டும் எடுப்பதும் உண்டு. இதனால், பல நூறு சாட்கள், எடிட்டிங் அறையில் பின்னர் அழிக்கப்படுகின்றன. அந்த காலமாக இருந்தால், பிலிம் ரோலில் இருந்து, பல நூறு அடிகள் வெட்டி வீசப்படும். இன்று டிஜிட்டலாக இருப்பதால், அனைத்தும் கம்ப்யூட்டரில் அழிக்கப்படுகின்றன.

- Advertisement -

ஆனால், இந்த விஷயத்தில் கில்லாடி யார் என்றால், லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன காட்சி தேவையோ, அதை மட்டுமே ஷூட் செய்து எடுப்பது அவரது வழக்கம். அப்போதே அந்த இடத்திலேயே, அந்த காட்சியை எடிட் செய்தும் விடுகிறது அவரது எடிட்டிங் குழு. அதனால், ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் காட்சிகள் அதே நாளில், எடிட் செய்து, பாதுகாக்கப்படுகிறது.

லியோ படப்பிடிப்பு தளத்தில், அந்த படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லியோ கனகராஜிடம் இந்த விஷயத்தை பார்த்து அசந்து போயிருக்கிறார்.இந்த இயக்குநர், என்ன தேவையோ அதை மட்டுமே எடுக்கிறார். ஒரு விஷயம் கூட அதில் மிஸ் ஆவதில்லை.மிக சரியாக யோசித்து, சரியானதை மட்டுமே செய்கிறார் என்று மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்டு இருக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.

- Advertisement -

சற்று முன்