வைகாசி பொறந்தாச்சு படம் மூலம், 1980களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக, முன்னணி நடிகராக இருந்த தியாகராஜன் மகன். அவரது அப்பா மலையூர் மம்பட்டியான், கொம்பேறி மூக்கன், நீங்கள் கேட்டவை போன்ற முக்கிய படங்களில் நடித்தவர்.
வைகாசி பொறந்தாச்சு படம் மிகப்பெரிய வெற்றியடைந்த பின்பு, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார் பிரசாந்த். குறிப்பாக வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா, ஜீன்ஸ், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் என பல வெற்றிப் படங்களில் நடித்து ஸ்டார் ஹீரோவாக கலக்கிக்கொண்டு இருந்தார்.
அழகான தோற்றத்தில் இளைஞராக இருந்த பிரசாந்த் படங்கள், பெரும்பாலும் காதலையே மையப்படுத்திய கதைகளாக இருந்தது. கண்ணெதிரே தோன்றினாள் படம் பெரிய ஹிட் ஆக அமைந்தது. புன்னகை அரசி சினேகா முதன் முதலில் அறிமுகமானது பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படத்தில்தான்.
இப்படி முன்னணி ஹீரோவாக அசத்திக்கொண்டிருந்த பிரசாந்த், கிரக லட்சுமி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணமான சில ஆண்டுகளுக்கு பிறகு, கிரக லட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரசாந்த் சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை சந்தித்தார். கோர்ட், வழக்கு என பிரசாந்த் வந்து சென்றது செய்தி தாள்களில் வெளியாகி அவரை இமேஜை டேமேஜ் ஆக்கியது.
இதற்கிடையே பிரசாந்த் நடித்த வின்னர், மம்பட்டியான், ஜாம்பவான், சாக்லேட் போன்ற பல படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனதால், படங்களில் நடிப்பதையே தவிர்க்க துவங்கினார் பிரசாந்த். அவர் மட்டும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நீடித்திருந்தால் விஜய், அஜீத் அளவுக்கு அவர் டாப் ஹீரோவில் ஒருவராக இருந்திருப்பார்.
இப்போது ரீ என்ட்ரியாக விஜய் நடிக்கும் கோட் படத்தில், பிரசாந்த் நடித்து வருகிறார். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது விஜய் படத்தில் நடித்த அனுபவம் என்ற கேட்ட போது விஜய் படத்தில் நடிக்கவில்லை. விஜய் உடன் நடிக்கிறேன் என்று திருத்தம் சொன்னார். நண்பர் விஜய் அரசியல் வருகை என்று செய்தியாளர் கேட்டதற்கு, விஜய் எனக்கு நண்பர் எல்லாம் இல்லை. சகோதரன் என்று சொல்லுங்கள் என்று கூறியவர், இருவரும் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டதை பொதுவெளியில் எப்படி சொல்ல முடியும், அதெல்லாம் ரொம்ப கஷ்டம் என்று சொல்லி பிரசாந்த் மறுத்துவிட்டார்.





