- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித் - விக்னேஷ் சிவன் படத்தில் எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரம் இருந்தது - வருத்தத்தில்...

அஜித் – விக்னேஷ் சிவன் படத்தில் எனக்கு ஒரு அருமையான கதாபாத்திரம் இருந்தது – வருத்தத்தில் சந்தானம்

- Advertisement -

தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் நுழைந்து விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் நடிகர் சந்தானம். ராம்பாலா இயக்கத்தில் உருவான அந்த நிகழ்ச்சி, அன்றைய தேதியில் ரிலீசான படங்களை எல்லாம் தரைமட்டத்திற்கு கலாய்த்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. சின்னத்திரையில் ஒளிபரப்பான இந்த தொடர் மூலம் அறியப்பட்ட சந்தானம், சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படம் மூலம் வெள்ளி திரைக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், ஜில்லுனு ஒரு காதல், வல்லவன் படங்களில் நடித்த அவருக்கு, அறை எண் 305ல் கடவுள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை கொடுத்தார் இயக்குனர் சிம்பு தேவன். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த சந்தானத்திற்கு,திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி.

- Advertisement -

அறிமுக இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. காதல் திரைப்படமாக சிவா மனசுல சக்தி எடுக்கப்பட்டாலும், அது ஹிட் அடிக்க முக்கிய காரணம் ஜீவா சந்தானத்திற்கு இடையேயான நகைச்சுவை காட்சிகள்தான். தொடர்ந்து அதே இயக்குனருடன் இணைந்து, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய வெற்றி திரைப்படங்கள் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார் சந்தானம்.

நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணியின் லொள்ளுத்தனம் சந்தானத்திடம் இருப்பதாக பலரும் கூற, கதாநாயகனுக்கு கால்ஷீட் கிடைத்தாலும் சந்தானத்திற்கு கால்ஷீட் இல்லை என்ற நிலை உருவானது. இயக்குனர்கள் ஏஎல் விஜய், சிறுத்தை சிவா, சுந்தர் சி படங்களில் சந்தானத்திற்கென தனி காமெடி ரோல்கள் உருவாக்கப்பட்டு ரசிகர்களை கலகலப்பாக்கியது. இந்த நேரத்தில், தனியாக தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சந்தானம், முதல் முதலாக கண்ணா லட்டு தின்ன ஆசையா என்னும் படத்தை தயாரித்து வெளியிட்டார்.

- Advertisement -

பிறகு ஹீரோக்களுடன் இணைந்து நகைச்சுவை புரிவதை தவிர்த்த அவர், தானே ஹீரோவாக மாறி நகைச்சுவை செய்ய ஆரம்பித்தார். அவரின் திட்டம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலம் வெற்றி பார்முலாவாக மாறியது. அடுத்ததாக, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு திரைப்படங்கள் மூலம் சந்தானம் பேசப்பட்டு வந்தாலும், அதன் பிறகு வெளியாகிய திரைப்படங்கள் அனைத்தும் அவருக்கு சறுக்கலையே கொடுத்தன. சந்தானம் மீண்டும் கதாநாயகர்கள் கூட இணைந்து காமெடி செய்ய வேண்டும் என்றே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் சந்தானம், “அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் எடுக்க இருந்த திரைப்படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் இருந்தது. ரொம்ப ஜாலியாகவும், அதேசமயம் படு சீரியஸான கதாபாத்திரமாகவும் என் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்ததால் நான் மிகவும் ரசித்தேன். நிச்சயமாக எனக்கு அந்த படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த படம் நின்றுவிட்டது” என்று தெரிவித்துள்ளார். சந்தானத்தின் இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், படம் நின்று விட்டதை நினைத்து வருத்தம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்