தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் விஜயுடன் கத்தி தெறி தனுஷூடன் தங்கமகன் விக்ரமுடன் 10 என்றதுக்குள்ள, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா உள்ளிட்ட படங்களில் சமந்தா நடித்திருக்கிறார். இந்தியில் வெளியான சிட்டாடல் வெப் தொடரும் சமந்தாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது.
புஷ்பா முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டுக்கு சமந்தா, அல்லு அர்ஜூனுடன் போட்ட குத்தாட்டம் பெரிய அளவில் வைரலானது. அதனால்தான் அதுபோன்ற ஐட்டம் பாடலை, புஷ்பா 2ம் பாகத்திலும் ஸ்ரீலீலா கலக்கலாக ஆடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாட்டும் பெரிய டிரண்டிங் ஆகி விட்டது.
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு, கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் 4 ஆண்டுகளில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். சமந்தாவை இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என நாக சைதன்யா வற்புறுத்தியதால் இந்த பிரிவு ஏற்பட்டதாக அப்போது கூறப்பட்டது.
ஆனால் சமீபத்தில் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த திரிஷாவுக்கு தோழியாக நடித்திருந்தார். மேலும் ஜெயம் ரவிக்கு இவர்தான் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் என்னை நான் அறிந்துக்கொள்வது என்பதே என்னை நேசிப்பதாகும். ஒரு மனிதனின் நரகமாக இருக்க நான் விரும்புகிறேன். கடவுளே நான் மிகவும் பணிவாக இருப்பது என்பது கடினம். ஆனால் என்னால் முடிந்ததை நான் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
அதாவது, நான் என்னையே நேசிக்கிறேன். ஆனால் மனிதர்கள் விரும்பாத ஒருத்தியாக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் பணிவாக இருக்க மாட்டேன். திமிராக தான் இருப்பேன். ஆனால் என்னால் முடிந்ததை செய்வேன் என்று அவர் பதிவில் மறைமுகமாக கூறியிருக்கிறார். இவருக்கு என்னதான் ஆச்சு, இப்போது எதற்கு இந்த பதிவு என அவரது ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.





