- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகை தான் அம்மன் என்று நெனைச்சவன் நான்.. - நடிகர் சந்தானம் சொன்னதை கேட்டு...

அந்த நடிகை தான் அம்மன் என்று நெனைச்சவன் நான்.. – நடிகர் சந்தானம் சொன்னதை கேட்டு வயிறு வலிக்க சிரித்த ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் ஆக்சன் சென்டிமென்ட் பேமிலி டிராமா திகில் திரில்லர் கதைகள் காமெடி என பலவிதமான கதைக்களத்தில் உருவான படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது. அதில் பக்தி படங்களும் மிக முக்கியமானவை.

பக்தி படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். திருவிளையாடல் கந்தன் கருணை மேல்மருவத்தூர் அற்புதங்கள் சபரிமலை அய்யப்பன் தெய்வம் முருகன் தாய் பராசக்தி ஏழுமலையான் மகிமை என ஏராளமான பக்தி படங்கள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன.

- Advertisement -

அதுமட்டுமின்றி இன்றைய முன்னணி நடிகைகள் ரோஜா மீனா ரம்யா கிருஷ்ணன் நயன்தாரா போன்றவர்களும் அம்மன் வேடங்களில் படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் 1980களில் வெளியான பல படங்களில் இப்படி அம்மன் வேடங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகையான கேஆர் விஜயா தான். இவரை புன்னகை அரசி என்பார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, சின்ன வயசுல ரொம்ப நாளாக நான் சினிமாவில் வர்ற கேஆர் விஜயா தான் உண்மையான அம்மன் சாமி என்று நினைச்சுட்டு இருந்தேன். நான் பரீட்சை எழுத போகும் போது கூட கேஆர் விஜயா போட்டோவை தான் பரீட்சை அட்டையில் ஒட்டீட்டு போவேன்.

- Advertisement -

ஒரு கட்டத்துக்கு அப்புறம்தான் இவங்க எல்லாம் நடிகை. சினிமாவில் நடிக்கறவங்க. அம்மன் சாமி எல்லாம் கிடையாதுன்னு எனக்கு புரிஞ்சுது. ஆனா இன்னைக்கு நான் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போட்டோவை எடுத்து என் பையன் கிட்ட காட்டி, இவங்க தான் அம்மன் என்று சொன்னால் அவன் ஏத்துப்பானா?

அன்னைக்கு நம்ம இருந்த காலம் வேற. இப்ப பசங்க இருக்கிற காலம் வேற என்று நடிகர் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். கேஆர் விஜயா அம்மன் சாமியாக பல படங்களில் நடித்த நிலையில் அவரது பாந்தமான தோற்றமும் முகவெட்டும் தெய்வாம்சம் பொருந்திய அந்த சிரிப்பும் பக்தியான ஒரு மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்