- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக கட்சியில் இணைவாரா? திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரா? - திடீரென தனது முடிவை தள்ளி...

தவெக கட்சியில் இணைவாரா? திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரா? – திடீரென தனது முடிவை தள்ளி வைத்த நடிகர் ராகவா லாரன்ஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக இருந்து பிறகு நடன இயக்குனராக மாறியவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். அஜீத்குமார் நடித்த அமர்க்களம் படத்தில் காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா பாடல் காட்சியில் திரையில் தோன்றி நடனமாடினார். பிறகு அற்புதம் ஸ்டைல் பார்த்தேன் ரசித்தேன் முனி போன்ற படங்களில் நடித்து ஹீரோவாக மாறினார்.

காஞ்சனா 2 காஞ்சனா 3 போன்ற திரில்லர் படங்கள் ராகவா லாரன்ஸ்க்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து மொட்ட சிவா கெட்ட சிவா சிவலிங்கா பாண்டி ராஜாதி ராஜா ருத்ரன் என பல படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

- Advertisement -

மாற்றம் என்ற சேவை அமைப்பை 2 ஆண்டுகளுக்கு முன்பு மே 1ம் தேதி துவங்கிய ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். நலிவடைந்த மக்களுக்கு அவர் பலவிதமான உதவிகளை செய்கிறார். மருத்துவ உதவி மாணவர்களுக்கு கல்வி உதவி என செய்து வருகிறார்.

இந்த நிலையில் தவெக தலைவர் தமிழக முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்து விட்டார். அந்த தொகுதியில் நடக்க போகும் இடைத்தேர்தலில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் தான் நிற்க போகிறார் என்ற தகவல் சில தினங்களாக பரவியது.

- Advertisement -

இதையடுத்து 2 தினங்களுக்கு முன்பு தனது எக்ஸ் பதிவில், இதுகுறித்து வருகிற 11ம் தேதி காலை 9.30 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால் ஒரு சிலர், லாரன்ஸ் அரசியலுக்கு வர மாட்டார். தேர்தலிலும் அவர் நிற்க மாட்டார் என்று கூறிய நிலையில் இது வெறும் பில்டப் என்றும் விமர்சித்து வந்தனர்.

இந்த சூழலில் இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பதிவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு காரணமாக நான் நாளை 11ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடவில்லை. நாளை மறுநாள் 12ம் தேதி காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று அந்த பதிவில் ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்