தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சரத்குமார். இப்போதும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 3 பிஹெச்கே படத்தில் நடிகர் சரத்குமார் தேவயானி இணைந்து நடித்திருக்கின்றனர். சூரியவம்சம் மூவேந்தர் படங்களுக்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் இந்த ஜோடி நடித்திருக்கிறது.
மிடில் கிளாஸ் பேமிலியில் சொந்த வீடு கட்டும் ஆசைகளை மையப்படுத்திய கதைக்களத்தில் 3 பிஹெச்கே படம் உருவாகி உள்ளது. நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சரத்குமார், தானும் வாடகை வீட்டில்தான் வசிப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் கூறியதாவது, வீடு விற்பது வாங்குவது என்பதெல்லாம் மனிதர்களின் தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு உட்பட்டது. என்னை பொருத்த வரை வாடகைக்கு என் வீட்டை விட்டிருக்கிறேன். நானும் என் மனைவி ராதிகாவும் மட்டும்தான் அந்த வீட்டில் இருக்கிறோம். என் பையன் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருக்கிறான்.
எங்களது மகள்களுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் எல்லாம் அவர்களது வீட்டில் இருக்கிறார்கள். நாங்க ரெண்டு பேர் மட்டுமே இருக்கிற இந்த வீட்டில் இரவு ஆகி விட்டால் 7 கதவுகளை பூட்ட வேண்டும். நான்தான் பூட்ட வேண்டும். நான் வீட்டில் இல்லை என்றால் என் மனைவி ராதிகா தான் பூட்ட வேண்டும். செக்யூரிட்டி உட்பட அந்த வீட்டில் 14 பேர் வேலை செய்கிறோம்.
என்னுடைய வீடு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சதுரடிகளை கொண்ட பெரிய வீடு. இரவில் நான் வெளியே இருந்தால் போனில், ராதிகாவிடம் வீடு கதவு எல்லாம் பூட்டியாச்சா, எப்படி இருக்கிறீங்க என்று நான் கேட்பது எனக்கு ஓகே. ஆனால் பெண்ணாக அவர் தனியாக வீட்டில் இருப்பது சிரமம். ஈசிஆர் ஏரியாவில் நாளுக்கு நாள் கூட்டமும் அதிகரித்து விட்டது.
அதனால் அந்த வீட்டை ஐடி நிறுவனம் ஒன்றில் வாடகைக்கு கேட்டார்கள். வாடகைக்கு கொடுத்து விட்டேன். நாங்கள் ஆழ்வார்பேட்டைக்கு ஷிப்ட் ஆகி விட்டோம். இப்போது ஆழ்வார்பேட்டையில்தான் இருக்கிறோம் என்று நடிகர் சரத்குமார் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





