- Advertisement -
Homeபொழுதுபோக்குபருத்திவீரன் படப்பிடிப்பில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது… ப்ளீஸ் அதை வெளியிடுங்க டைரக்டர் அமீர் சார்...

பருத்திவீரன் படப்பிடிப்பில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது… ப்ளீஸ் அதை வெளியிடுங்க டைரக்டர் அமீர் சார் – கோரிக்கை வைத்த நடிகர் சரவணன்!

- Advertisement -

இயக்குனர் அமீர் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான படம் பருத்திவீரன். இதில் நடிகர் சிவக்குமாரின் மகன், நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிகராக அறிமுகமானார். பிரியாமணி முத்தழகு என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

பருத்திவீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு சித்தப்பாவாக செவ்வாழை என்ற கேரக்டரில் நடிகர் சரவணன் நடித்திருந்தார். படம் முழுவதும் நடிகர் கார்த்தியுடன் சித்தப்புவாக பெரிய மீசை வைத்த கேரக்டரில் சரவணனின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் சரவணன் நடித்த பருத்திவீரன் படம், அவருக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து சமீபகாலமாக பல படங்களில் வில்லன் காமெடி உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் சரவணன், இப்போது ஜீ5 ஓடிடி தளத்தில் சட்டமும் நீதியும் என்ற வெப் சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையை மையப்படுத்திய இந்த தொடரில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சரவணன் கூறியதாவது, பருத்திவீரன் படப்பிடிப்பு நடந்த போது படத்தின் நாயகன் கார்த்தி நடிப்பதற்கு முன்பு அதே காட்சியில் இயக்குனர் அமீர் நடித்துவிடுவார். கார்த்தி வருவதற்குள் அந்த காட்சியில் இவர் நடித்து முடித்து விடுவார். அப்படி ஒரு வெர்ஷன் படப்பிடிப்பு முடியும் வரை போய்க்கொண்டே இருந்தது.

- Advertisement -

கார்த்தி நடித்தது போல பருத்திவீரன் படத்தில் அமீரும் நடித்து இருக்கிறார். அது எல்லாம் அமீரிடம்தான் உள்ளது. அதையே அவர் ஒரு படமாக எடுக்கலாம். அதை எல்லாம் கட் செய்தால் ஒரு படமாகவே போடலாம். அவ்வளவு அழகாக இருக்கும். நீக்கப்பட்ட காட்சிகள் என்று அதை எல்லாம் எடுத்துப் போட்டாலே பருத்திவீரன் டெலீட்டட் சீன்ஸ் போட்டு ரிலீஸ் பண்ணினாலே மிகப்பெரிய ஹிட் ஆகும்.

அந்த படத்துல கார்த்தி நடிச்ச பைட் சீன் எல்லாம் அமீரும் பண்ணியிருக்கிறார். பைட்டுல பல்டி எல்லாம் அமீர் சாரே அடிச்சிருக்கார். தொம் தொம் என்று அவரும் கீழே விழுந்திருக்கார். அமீர் சார் அவர்களே, தயவு செய்து அதை பண்ணுங்க சார். அந்த டெலீட்டட் சீன்ஸ் மட்டும் போட்டு ஒரு படம் பண்ணுங்க சார். அதுவே போதும் என்று நடிகர் சரவணன் அந்த நேர்காணலில் இயக்குனர் அமீருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்