- Advertisement -
Homeபொழுதுபோக்குநயன்தாரா மற்றும் மாதவன் நடிப்பில்… நேரடியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் படம்… பாஸ் மார்க் வாங்கியதா?

நயன்தாரா மற்றும் மாதவன் நடிப்பில்… நேரடியாக ஓடிடியில் வெளியான டெஸ்ட் படம்… பாஸ் மார்க் வாங்கியதா?

- Advertisement -

இப்போதெல்லாம் சில படங்கள் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகி விடுகின்றன. கொரோனா தொற்று காலத்தில் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த போது சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டன. அப்படி சில படங்கள் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

ஆனால் இப்போது தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்ய வாய்ப்பிருந்தும், சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸாகின்றன. மொத்த விலை கொடுத்து அந்த படங்களை ஓடிடி தளங்களே வாங்கி ரிலீஸ் செய்கின்றன. அப்படி சமீபத்தில் நயன்தாரா மாதவன் சித்தார்த் நடிப்பில் உருவான டெஸ்ட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

டெஸ்ட் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை ஷசிகாந்த் டைரக்ட் செய்து இருக்கிறார். படத்தில் மாதவன் நயன்தாரா சித்தார்த் மீரா ஜாஸ்மின் முருகதாஸ் காளிவெங்கட் மோகன்ராம் ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்துக்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார்.

கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களம் உருவாகி இருக்கிறது. மாதவன் நயன்தாரா சித்தார்த் மூவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களின் நடித்திருக்கின்றனர். வாழ்க்கை என்பதே ஒரு டெஸ்ட் தான். அதில் நம்பிக்கையும் விடாமுயற்சியும் அத்துடன் நேர்மையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதை கிரிக்கெட் மூலமாக சொல்ல முயற்சித்திருக்கின்றனர்.

- Advertisement -

டிஜிட்டல் ஆன்ட்ராய்டு என டெக்னாலஜி நிறைந்த இந்த காலகட்டத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் குழந்தையை வீட்டில் மறைத்து வைப்பது என்பதெல்லாம் படத்தில் மிகவும் சினிமாத்தனமாக உள்ளது. இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகர்களை வைத்துக்கொண்டு சுவாரஸ்யம் இல்லாத பல காட்சிகள் இந்த படத்தில் இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

படத்தின் 2ம் பாதியில் ரசிகர்கள் படம் பார்க்க முடியாத அளவுக்கு திரைக்கதையில் தேக்கம் சலிப்படைய வைக்கிறது. நிறைய நல்ல படங்கள் சரியான டிஜிட்டல் விலை கிடைக்காமல் ரிலீஸ் ஆகாமல் தேங்கியிருக்கின்றன. நெட்பிளிக்ஸ் போன்ற பெரிய ஓடிடி நிறுவனங்கள் அத்தகைய படங்களை நல்ல விலை கொடுத்து வாங்காமல் டெஸ்ட் போன்ற படங்களை நேரடியாக வாங்கி ரிலீஸ் செய்து தங்களது சப் ஸ்கிரைப்பர்களை இப்படி சோதிக்கலாமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்

- Advertisement -

சற்று முன்