சில மாதங்களுக்கு முன்பு வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் நடிகர் சசிக்குமாருக்கு சூப்பர் கம்பேக் கொடுத்திருக்கிறது. அயோத்தி படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் சசிக்குமாருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தரணி ராஜேந்திரன் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க நடிகர் சசிக்குமார் கமிட் ஆகி இருக்கிறார்.
சினிமாவை பொருத்த வரை தொடர் வெற்றிகள் இருக்கும் வரை இயக்குனர் அல்லது ஹீரோ நடிகருக்கு வரவேற்பும் ஆதரவும் தயாரிப்பாளர்களிடம் நிறைய கிடைக்கும். அதுவே சில தோல்விகள் அடுத்தடுத்து வரும் பட்சத்தில் இயக்குனர், ஹீரோ யாராக இருந்தாலும் அவர்களது இமேஜ் அதலபாதாளத்துக்கு சென்றுவிடும். ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு பிறகு சசிக்குமாரின் இமேஜ் உயர்ந்திருக்கிறது.
தரணி ராஜேந்திரன் இயக்கும் புதிய படத்தை ஜே கே ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சசிக்குமார் பிறந்த நாளில் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. யாத்திசை படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன் டைரக்ட் செய்யும் இந்த படத்தில் நடிகர் சசிக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் என்றுதான் முதலில் தகவல் வெளியானது.
ஆனால் உண்மையில் இந்த படத்தின் கதாநாயகன் சசிக்குமார் அல்ல. சேயோன் என்பவர்தான் படத்தில் நாயகன் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பவானி ஸ்ரீ சமுத்திரக்கனி ஷிவதா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் வரை முடிந்துவிட்டதாகவும் படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் சசிக்குமார் நடிக்க 5 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தந்திருக்கிறார். நட்புக்காக கேமியோ ரோலில் சசிக்குமார் நடிக்கிறார். பிரிட்டிஷ் சகாப்தத்தின் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் கதைக்களத்தில் சசிக்குமார் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்று படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சினிமா மார்க்கெட்டில் நடிகர் சசிக்குமாரின் இமேஜ் உயர்ந்திருக்கிறது. அதனால் படத்தை வணிக ரீதியான அதிக கவனம் பெற வைக்கும் யுக்தியாக இந்த படத்தில் நடிகர் சசிக்குமாரை முக்கிய கேரக்டரில் கேமியோ ரோலில் நடிக்க செய்திருக்கின்றனர் என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.





