- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா - சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சசிக்குமார்...

சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழா – சிறந்த நடிகர் விருது பெற்ற நடிகர் சசிக்குமார் – சிறந்த திரைப்படம் விருதை வென்ற படம் எது தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிக்குமார். அந்த படத்தில் அவரே நாயகனாகவும் நடித்திருந்தார். இதற்கு முன்பு இயக்குனர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிக்குமார். அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்திலும் சசிக்குமார் நடிப்பு பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றது.

தொடர்ந்து சசிக்குமார் நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இந்த ஆண்டில் நடிகர் சசிக்குமார் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்திருந்தார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இலங்கையில் இருந்து சென்னைக்கு தப்பியோடி வரும் ஒரு குடும்பத்தின் கதை இது. இதில் இலங்கை தமிழ் பேசும் ஒரு கேரக்டரில் சசிக்குமார் நடிப்பு பாராட்டை பெற்றது. தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் சென்னைக்கு தரும் சசிக்குமார் எப்படி பல பிரச்னைகளை சமாளிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

இந்நிலையில் சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் ராம் இயக்கிய பறந்துபோ மற்றும் நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய படங்கள் விருது பெற்றது. சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 11ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடந்தது. தேர்வு செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன.

- Advertisement -

இந்நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் இந்த ஒரு வாரம் விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த பறந்து போ என்ற திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதை பெற்றது.

தொடர்ந்து அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் சிம்ரன் நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு 2வது சிறந்த தமிழ் திரைப்படம் என்னும் விருது வழங்கப்பட்டது. மேலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சசிக்குமார் சிறந்த நடிகர் என்ற விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்