- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்ப மட்டும் எங்க தலைவர் விஜய் பத்தி பெருமையா பேசறீங்களே? அமைதிப் படை ரி ரிலீஸ்...

இப்ப மட்டும் எங்க தலைவர் விஜய் பத்தி பெருமையா பேசறீங்களே? அமைதிப் படை ரி ரிலீஸ் ஆகிறது என்பதாலா? – நடிகர் சத்யராஜை விளாசும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் சத்யராஜ் நடித்த அமைதிப்படை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. மறைந்த இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் சத்யராஜ் அப்பா மகன் என 2 வேடங்களில் நடித்திருந்தார். ரஞ்சிதா கஸ்தூரி சுஜாதா ஆர் சுந்தர்ராஜன் மணிவண்ணன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

அரசியல் களத்தை மையப்படுத்தி கிண்டலும் நக்கலும் நிறைந்த ஒரு திரைக்கதையாக உருவான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படம் தேர்தல் நேரத்தில் திரைக்கு வருவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அமைதிப்படை படம் ரி ரிலீஸ் ஆகும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்து படத்தின் நாயகன் சத்யராஜ் பேசினார். அப்போது அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் ஒருமுறை கூறியிருந்தார். இதற்காக நடிகர் விஜய்க்கு நான் போன் செய்து தேங்க்ஸ் சொன்னேன்.

நான் ஒரு கட்டத்தில் வளர்ந்து வரும் நாயகனாக இருந்து பிறகு இறங்கு முகத்தில் இருந்தேன். சூர்யா விஜய் தனுஷ் என புதிய இளம் நடிகர்கள் வருகையால் என் படங்கள் சரியாக போகாததால் நான் கேரக்டர் ரோலுக்கு மாறிவிட்டேன். அந்த நேரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகரான விஜய் என்னை பாராட்டியது பெரிய சந்தோஷத்தை தந்தது என்று கூறினார்.

- Advertisement -

திமுக ஆதரவாளரான நடிகர் சத்யராஜ் தொடர்ந்து திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் பாராட்டி பேசி வருகிறார். அதே நேரத்தில் அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துள்ளார். மேலும் அவர் நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால் சத்யராஜின் மகன் சிபிராஜ் விஜயின் ரசிகராகவும் தவெக ஆதரவாளராகவும் உள்ளார்.

இந்த சூழலில் அமைதிப்படை படம் ரி ரிலீஸாவதால் அந்த படம் நன்றாக ஓட வேண்டும். அனைத்து தரப்பு ரசிகர்களும் தன் படத்தை காண வரவேண்டும். நிறைய வசூலிக்க வேண்டும். குறிப்பாக திமுக ஆதரவாளராக உள்ள தனக்கும் தன் மகள் திவ்யாவுக்கும் எதிராக விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடக்கூடாது என்பதற்காக சத்யராஜ், விஜய் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். இப்ப மட்டும் எங்க தலைவர் விஜய் பத்தி பெருமையா பேசறீங்களே என்று தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்